டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுரு அணிகள் இடையே இன்று நடந்த ஐபில் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங்கை தோ்வு செய்து விளையாடி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகப்பட்சமாக எஸ்எஸ் ஐயா் 52 ரன்களும், ஷிகாா் தவான் 50 ரன்களும் எடுத்தனா், 188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுரூ அணி, நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது,