கேஜ்ரிவாலுக்கு வால் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்… வெட்கக் கேடு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

hraja - 2026

கேஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பது வெட்கக்கேடு என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

டில்லி ஒரு மினி இந்தியா. பாரத தேசத்தவர் அனைவருக்கும் அது சொந்தம். தமிழ் மாணவர்கள் தில்லி மாணவர்களின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. தமிழக ரசிகர்களின் ஆதரவால் வளர்ந்த பிரகாஷ் ராஜ், கேஜ்ரிவால் கருத்துக்கு ஆதரவளித்துள்ளது வெட்கக்கேடு.. என்று தனது டிவிட்டர் பதிவில் காட்டமாகக் கூறியுள்ளார் ஹெச்.ராஜா.

தமிழக மாணவர்கள் தில்லி பல்கலைக்கழங்களில் சேர்ந்து, தில்லி மாணவர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதாகவும், அதற்கு தடை போடப் படும் என்றும் கூறியிருந்தார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். அவரது கருத்துக்கு ஆதரவளித்து, அவருக்காக தேர்தல் பிரசாரம் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்நிலையில் அவரது கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தமிழர்களால் சினிமாத் துறையில் வளர்ந்த பிரகாஷ் ராஜ், தான் தமிழன் இல்லை என்றும், தாம் கன்னடன் என்றும் கூறி, பிரச்னை எனக்கானது அல்ல என்று ஒதுங்கிக் கொண்டார்.

ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பதிவு இது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.