ஓசி சோறு வகையறா எங்கிருந்தாலும் சத்தியமூர்த்தி பவன் பந்திக்கு வரவும்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

satyamurthi bhavan - 2026

மழை பெய்ய வேண்டி அறநிலையத்துறை கோவில்களில் வருண யாகம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த #ஓசிசோறு வகையறா எங்கிருந்தாலும் பந்திக்கு சத்தியமூர்த்தி பவன் வரவும்!
இப்படிக்கு,
பந்தியில் பரிமாறுவோர்!

மக்களுக்கு நலன் வேண்டி, மழை பெய்யட்டும் என்று நம்பிக்கை வைத்து யாகம், ஜபம் செய்தால் அதை மூட நம்பிக்கை என்று சொல்லி பொதுமக்களுக்கு நல்லதே நடக்கக் கூடாது என்ற மோசமான குதர்க்க எண்ணத்தை வெளிப்படுத்தியவர்கள், இப்போது பதவி வெறியில் சண்டி யாகம் நடத்துவர்கள் குறித்து, இது மூடநம்பிக்கை, இது போன்று யாகம் எல்லாம் நடத்தக் கூடாது என்று சொல்வார்களா? அப்படிச் சொன்னால் பந்தியில் போடப் படும் ஓசி சோறு கிடைக்காமல் போய்விடுமே! என்று கலாய்க்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

எதிரிகளும் தீய எண்ணங்களும் அழிந்து, தர்மத்தின் படி நடப்பவர்களுக்கு நன்மை கிடைக்க சண்டிஹோமம் செய்வதை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டிருப்பவர்களை வசைபாடாமல் விட்டிருக்கிறார்களே ஏனோ?!

  • இவ்வாறு சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவலாகக் காணப் படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.