
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 647 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: மத்திய தொழிற்பாதுகாப்புப் படை(Central Industrial Security Force)
பணி: ASSTT.SUB INSPECTOR
காலியிடங்கள்: 647
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய https://www.cisf.gov.in/cisfeng/wp-content/uploads/2021/12/3815.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.