நடிகர் விஷால் தான் உறுதியளித்திருந்தபடி சென்னை மதுரவாயல் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவை ஏற்று கொண்டுள்ளார்
நடிகர் விஷால் சென்ற ஆண்டு மதுரவாயலில் உள்ள ஒரு பள்ளி விழாவுக்கு சென்றிருந்த போது அங்கு கல்வி பயிலும் மாணவர்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுப்பவர்களை கல்லூரியில் தானே படிக்க வைப்பதாக தெரிவித்து இருந்தார் .
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் அப்பள்ளியைச் சேர்ந்த பத்மப்ரியா ( 1137 / 1200), புவனேஸ்வரி ( 1128/1200), பி.சக்தி ( 1082 /1200) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

இந்நிலையில் இந்த மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவுகளை நடிகர் விஷாலின் தேவி அறக்கட்டளை ஏற்றுக் கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களை அழைத்து விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார் .




