இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்லும் என்று கூகிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெறும் என்றும், இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்றும் கூறியுள்ளார்.
இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்பவே இரு அணிகளும் அபாரமாக ஆடிவருகின்றன. இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் ஆடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. 3ல் ஆடி மூன்றிலுமே வென்ற நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை தவிர ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சிறப்பாக ஆடிவருகின்றன.




