சென்னை: மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அமமுக கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் அமமுக.,வில் இருந்து விலகி அதிமுக.,வில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்..
அமமுக மற்றும் இதர மாற்றுக் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து, தாய்க்கழகமான அஇஅதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். #AIADMK




