அழகுமுத்துக்கோன் பிறந்த தினம்; அரசு மரியாதை! நெல்லையில் அமமுக-அதிமுக., மோதல்!

Published:

azhagumuthukon - 2026இன்று வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப் படுகிறது.

இதனை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

azhagumuthukon nellai - 2026இதனிடையே, நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அழகுமுத்துக் கோன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக., மற்றும் அமமுக.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது.

azhagumuthukon nellai2 - 2026இந்த மோதலின் போது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. இந்தத் தாக்குதலில், இருவர் தலையில் அடி பட்டு, பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கே போலீஸார் குவிக்கப் பட்டனர்.

Related articles

Recent articles

spot_img