
உலகம் முழுவதும் சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருகின்றனர். மேலும், அவர்களையும் தொற்று பாதிக்காமல் இருக்க கையுறைகள், முகக்கவசம் என வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளோடு சிறப்பு கவச உடையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள துலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 20 வயதான நர்ஸ் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். வெயிலின் தாக்கம் அதிகமான சூழலில் உடல் முழுக்க பாதுகாப்பு கவச உடையை அணிவதை கடுமையாக உணர்ந்த அவர், நீச்சல் உடை எனப்படும் டூ பீஸ் மட்டும் அணிந்துகொண்டு அதற்க்கு மேல் அந்த பாதுகாப்பு கவச உடையை அணிந்துகொண்டு கொரோனா ஆண்கள் வார்டில் வேலை பார்த்துள்ளார்.
அதனை போட்டோ எடுத்த நோயாளி ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் மீது மருத்துவமனை நிர்வாகம், மருத்துவ விதிமுறைகளை மீறி ஆடை அணிந்து பணியில் ஈடுபடுத்ததாக அவரை பணியிடை நீக்கம் செய்தது.
இதுகுறித்து அந்த நர்ஸ் தெரிவித்ததாவது, வெயில் தாக்கத்தில் அந்த கவச உடையே கடுமையாக உள்ளது. அதனை குறைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தேன். ஆனால் பாதுகாப்பு கவச உடை டிரான்ஸ்பிரண்டாக இருக்கும் என எனக்கு தெரியாது என கூறினார்.
அதே சமயம் அவருடைய புகைப்படம் வேகமாக இணைய தளங்களில் வெளியாகியதையடுத்து பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி அப்பெண்ணை தனது கம்பெனியின் மாடலாக பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், சர்ச்சை நர்ஸிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது