கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் விழா கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
க.பரமத்தி ஒன்றியம் ,தொட்டியபட்டி ஊ.ஒ.தொ. பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் காமராசர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட து. விழாவில் ரூ 10,000 மதிப்பிலான வீட்டுப் பாடக்குறிப்பேடு (Home Work டைரி) ஆகியவற்றை பிரகாஷ் வழங்கினார். ரூ 10,000 மதிப்பில் வெண்மை நிற சீருடைகள் வழங்கப்பட்டது.
விழாவில் ஆசிரியை ரேவதி , பிரபு, ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக இனிப்பு காரம் ஆகியாற்றை இசைவாணன் வழங்கினார்.
இதே போல், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கார்வழி பகுதி ஊ.ஒ.தொ. பள்ளி கார்வழியில் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
விழாவிற்கு பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ரெங்கசாமி தலைமையிலும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் செல்வி முன்னிலை வகித்தார் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரூ 15000 மதிப்புள்ள லாங் சைஸ் நோட்/ சிறு குறிப்பேடு / வாய்ப்பாடு / திருக்குறள் புத்தகம்/ பேனா / ரூல் பென்சில் / டைரி உள்பட வெள்ளியம்பாளையம் சுந்தரம் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.
விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் மேலும் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி / பேச்சுப் போட்டி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் வாசுதேவன் பரிசு வழங்கினார்
மேலும் பள்ளி குழந்தைகள் அனைவரும் காமராஜர் முகமூடி அணிந்து கொண்டு காமராஜர் நிறைவில் பள்ளி இடைநிலை ஆசிரியர் தங்கராஜ் நன்றி கூறினார்.