மின்சார கனவு பட ஸ்டைலில் நண்பருக்கு தூது வந்தவருடன் காதல் !

Published:

sonam - 2026 பாலிவுட் நடிகை சோனம் கபூர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சோனம் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஆனந்தை சந்தித்து பேசிப் பழகியது குறித்து சோனம் கபூர் மனம் திறந்துள்ளார்.sonam kapoor - 2026என் நண்பர்கள் சேர்ந்து ஆனந்தின் நெருங்கிய நண்பருடன் என்னை சேர்த்துவிட முடிவு செய்தனர். நான் கடந்த 2015ம் ஆண்டு பிரேம் ரத்தன் தன் பாயோ பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்தேன். அப்பொழுது ஒரு நாள் மாலை என் நண்பர்கள் தாஜ் ஹோட்டலில் உள்ள பாருக்கு என்னை ஏமாற்றி வரவழைத்தனர்.

செம கடுப்பில் அங்கு சென்றால் யாரோ 2, 3 பசங்களை அறிமுகம் செய்து வைத்தனர். நான் யாரையும் டேட் செய்ய விரும்பவில்லை. எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. இது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கோபப்பட்டேன். ஆனந்த் மற்றும் அவரின் நண்பரை சந்தித்தேன்.sonamanand - 2026ஆனந்தின் நண்பர் என்னை போன்று உயரமானவர், புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர், இந்தி படங்களின் பெரிய ரசிகர், படித்தவர். ஆனால் அவரை பார்த்தால் எனக்கு என் தம்பி ஹர்ஷ்வர்தன் தான் நினைவுக்கு வந்தான். அதனால் அந்த நபரை டேட் செய்யக் கூடாது என்று முடிவு செய்தேன். நடிகர் அனில் கபூர் தான் என் அப்பா என்று ஆனந்துக்குத் தெரியாது. அவரின் நண்பருக்கு பதில் ஆனந்துடன் தான் அதிகம் பேசினேன். ஆனந்த் தனது நண்பருடன் என்னை பேச வைக்க முயன்றார். ஆனால் நானோ கடைசியில் அவருடன் தான் பேசினேன்.sonam anand - 2026ஒரு நாள் ஆனந்த் எனக்கு ஃபேஸ்புக்கில் ரிக்வெஸ்ட் கொடுத்து இன்னும் சிங்கிளாக இருக்கிறீர்களா என்று கேட்டார். ஏனென்றால் என் நண்பர் ஒருவர் லண்டனில் உள்ளார். அவர் சிங்கள் தான். தயவு செய்து அவருடன் பேசவும் என்றார். நான் கோபப்பட்டு ஆனந்தை திட்டிவிட்டேன். sonam anand1 - 2026எனக்கு ஏன் மெசேஜ் அனுப்பினீர்கள் என்று கேட்டேன். பின்னர் நானும், ஆனந்தும் போனில் பேச ஆரம்பித்தோம், அதையடுத்து சந்தித்தோம். 2 வாரங்கள் கழித்து இன்னும் நான் உங்களின் நண்பருடன் தான் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று ஆனந்திடம் கேட்டேன். அதற்கு அவரோ, நீ எனக்கு தான், வேறு யாரிடமும் பேச வேண்டாம் என்றார் என சோனம் கபூர் மனம் திறந்துள்ளார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img