23/09/2019 2:46 PM

கரூரில் நாளை முதல் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தொடக்கம்!
கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

நாளை முதல் மருத்துவக்கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், 150 மாணவர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் பேட்டரி பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கரூரில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி காந்தி கிராமத்தில், 17.45 ஏக்கரில், 269 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள், , கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டன.

அடிமட்ட தளத்துடன், 8 மாடிகள் கொண்டதாக, 150 மாணவர்கள் பயிலகூடிய மற்றும், 800 நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெறும் வகையில் தற்போது மருத்துவக் கல்லுரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

இங்கு, தரை தளத்தில் சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் பொது வார்டுகளும், ரத்த வங்கியும் செயல்பட உள்ளன. முதல் தளத்தில் தோல் நோய் சிகிச்சை, மார்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளும், இரண்டாம் தளத்தில் தொழிலாளர் வார்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பொது அவசர சிகிச்சை பிரிவுகளும், மீட்டிங் அறை, அறுவைச் சிகிச்சை அரங்கும் செயல்பட உள்ளன.

மூன்றாம் தளத்தில் பொது வார்டு, காசநோயாளிகள் பிரிவு, மன நோயாளிகள் பிரிவும், நான்காம் தளத்தில் மகப்பேறு மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவும், ஐந்தாம் தளத்தில் எலும்பு சம்பந்தமான நோய்கள் பிரிவு, தோல் வியாதிகள், நுண் சிகிச்சை பிரிவுகள், பெண்களுக்கான மரபியல் நோய்கள் பிரிவும், ஆறாம் தளத்தில் பொது அறுவைச் சிகிச்சை, காது, தீ விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை பிரிவும், ஏழாவது தளத்தில் 11 வகையான அறுவை சிகிச்சை அரங்குகளும், 200 பேர் அமரக்கூடிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 150 மாணவர்கள் பயிலக்கூடிய வகையில் வகுப்புகள் கொண்ட ஆறு மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இதில் முதல் தள வகுப்பறையில் உடற்கூறு இயல் துறையும், இரண்டாம் தளத்தில் மனித உடலின் அடிப்படை தொடர்பாக பயிலும் உடலியல் அறையும், உயிர் வேதியியல் துறை, சமூக மருத்துவதுறையும், மூன்றாம் தளத்தில் நோயியல் துறையும், நான்காம் தளத்தில் மைக்ரோ உயிரியியல் துறை மற்றும் தடவியியல் துறையும், ஐந்தாம் தளத்தில் மருந்தியியல் துறையும், ஆறாம் தளத்தில் தேர்வு அறைகளும், ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கூட்டரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் பேட்டரி பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பேட்டரிப் பேருந்துகள் முதற்கட்டமாக சென்னை மற்றும் கோவையில் தொடங்கப்படும் என்றும்,  சென்னையில் மட்டும் முதற்கட்டமாக 1000 பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தப்படும் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.Recent Articles

அரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.!

அந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்" என தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

Related Stories