வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு மற்றும் வேலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் 5–ம் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அண்ணா தி.மு.க.வின் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
கடந்த 27–ந்தேதி மற்றும் 28–ந்தேதிகளில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியிலும், 6 மணிக்கு வேலூர் சட்டமன்றத் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதேபோல துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.




