ஆடிப்புரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இதனால் அத்திவரதர் தரிசனம் இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணிக்கே கிழக்கு நுழைவு வாசல் மூடப்படும் என்றும், கோவிலில் வரிசையில் இருப்பவர்கள் தரிசனம் முடிந்ததும் 5 மணி வாக்கில் அனைத்து தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இரவு 8 மணிக்கு மேல் நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவு நாளான ஆகஸ்ட் 17 அன்று மாலை 5 மணியுடன் அத்தி வரதர் வைபவம் முழுவதுமாக நிறைவு பெறும் என்றும், அதன் பின் அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கும் வேலை துவங்கபடும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.