
மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை எனில் அப்பாவை ஊசி போட்டு கொன்று விடுங்கள் என மகன் ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பேர் வரை புதிதாக நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் மகாராஷ்டிரா மாநிலம் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் சந்திராபூர் பகுதியை சேர்ந்தவர் சாகர் கிஷோர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கும் நோக்கில் மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளை நாடி உள்ளார்.
இருந்தாலும் அவர் அணுகிய மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லாத காரணத்தினால் தனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில்தான் தனது தந்தையை ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டு தனது நிலையை காணொளி மூலம் பகிர்ந்துள்ளார்.
‘அப்பாவை ஆக்ஸிஜன் உதவியுடன் ஆம்புலன்ஸில் வைத்துள்ளேன். எந்த மருத்துவமனையிலும் படுக்கை வசதி காலியாக இல்லை என சொல்லிவிட்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை.
அதனால் தான் இதனை சொல்கிறேன். மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை எனில் அப்பாவை ஊசி போட்டு கொன்று விடுங்கள். எனக்கு வேறு வழியில்லை’ என உருக்கத்துடன் தனது நிலையை பகிர்கிறார் அவர்.
24 घंटे चक्कर लगाए, कहीं बेड नहीं!
— Puja Bharadwaj (@Pbndtv) April 14, 2021
बुज़ुर्ग मरीज़ के बेटे की गुहार, ‘या बेड दो या इंजेक्शन देकर मार दो!’
महाराष्ट्र के चंद्रपुर का हाल. pic.twitter.com/ZzxhlnzdZL