தீபாவளி ஸ்பெஷல்: குல்கந்து போளி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kulkand - 2026

குல்கந்து போளி

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்,

ரோஜா குல்கந்து – கால் கப்,

தேங்காய்த் துருவல் – கால் கப்,

சர்க்கரை – கால் கப்,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,

அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் – கால் கப்,

நெய் – தேவையான அளவு.

செய்முறை:

kulakand poli - 2026

மைதா மாவில் மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் பிசைந்து தனியே வைக்கவும். வாணலியில் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கெட்டியாகும்வரை வதக்கி, கடைசியாக குல்கந்து, ஏலக்காய்த்தூள் அரிசி மாவு சேர்த்து ஒருமுறை கிளறி உடனே இறக்கி ஆறவிடவும்.

பிசைந்து வைத்துள்ள மைதா மாவை ஒரு பெரிய நெல்லிக் காய் அளவு உருண் டையாக உருட்டி எண்ணெய் தடவிய இலை அல்லது பிளாஸ்டிக் கவர் மீது வைத்து அப்பளம் அளவுக்கு மெல்லிய தாகத் தட்டவும். தேவையான அளவு குல்கந்து பூரணத்தை, மாவின் நடுவில் வைத்து, மூடி, மீண்டும் சமமாக கால் அங்குல கனத்துக்கு போளி யாகத் தட்டவும். தோசைக்கல்லை காயவிட்டு போளியை சேர்த்து, சிறிது நெய் விட்டுத் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.