Golu kankatchi2
Golu kankatchi2

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்

கேள்வி: நவராத்திரி விரதத்தை ஒருமுறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா?

பதில்: சரந் நவராத்திரி விரதத்தை நித்ய கர்மா என்று அழைத்தார்கள். உண்மையில் இதனை நைமித்திகம் என்று அழைக்க வேண்டும். ஆனால் நித்ய கர்மா என்று கூறுவதன் உத்தேசம் என்னவென்றால் செய்து தீர வேண்டும் என்று பொருள்.
சிலச்சில பருவகால பண்டிகைகளை, சில விரதங்களை செய்யலாம்… செய்யாமல் விடலாம். ஆனால் சரந் நவராத்திரி விரதம் மட்டும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றே கூறப்படுகிறது.

அதனால் தீட்சையாக ஏற்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும்  கடைபிடிக்க வேண்டும். அதனால், இந்த ஆண்டு செய்தால் அடுத்த ஆண்டும் செய்ய வேண்டுமா என்று கேட்பதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே விதி.

ஆயின், ஒரு ஆண்டு இதனை  மிகச் சிறப்பாகச் செய்யலாம். பிறிதொரு ஆண்டு  அத்தனை சிறப்பாகச் செய்ய இயலாமல் போகலாம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவரும் விதிமுறைகளோடு இந்த திவ்யமான சரந் நவராத்ரி விரதத்தை  கடைப்பிடிக்க வேண்டும் என்றே சாஸ்திரம் தெரிவிக்கிறது. 

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending