December 5, 2025, 4:28 PM
27.9 C
Chennai

ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

thiruma stalin - 2025

திருமாவளவனும் மு.க.ஸ்டாலினும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும் என்று பாஜக., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்து….

திரு.திருமாவளவன் அவர்களே, திரு.ஸ்டாலின் அவர்களே,

மனு ஸ்மிருதியை எழுதியது யார்? அதற்கான வரலாற்று ஆவணங்கள் உங்களிடம் உள்ளனவா?

இந்தியாவில் எப்போது, எந்த காலகட்டத்தில் மனு நீதி கடைபிடிக்கப்பட்டது என்று உங்களால் சொல்ல முடியுமா?

சர். வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயனால் 1794ம் ஆண்டு மனுஸ்மிருதி என்ற நூல் எழுதப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? இஸ்லாமியர்கள் ஷரியத் முறையை பின்பற்ற வேண்டும் என்றும், இஸ்லாமிய மற்றும் ஹிந்து சட்ட விதிகளை, பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இருந்த நெறிமுறைகளை, சமய மற்றும் சமூக கட்டமைப்புகளை, தங்களின் ஐரோப்பிய முறைப்படியான கருத்துக்களோடு திணித்து மாற்றியமைத்தது அன்றைய ஆங்கிலேயே நிர்வாகம் என்று அப்துல்லா ‘அகமது அன்-நைம்’ என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளது தங்களுக்கு தெரியுமா?

நீங்கள் கூறிய மனு தர்ம நூல் 1887 ம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தால் உண்மைக்கு புறம்பானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

அப்படி உங்களுக்கு தெறியுமென்றால், நீங்கள் மேற்கோள் காட்டிய மனு தர்ம நூல் என்பது ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்டது என்ற அடிப்படையில் ஹிந்து மதத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிற நிலையில், மதங்களுக்கிடையே வெறுப்பை தூண்டி விட்டு மதக்கலவரத்தை தமிழகத்தில் உருவாக்க முயற்சிக்கிறீர்கள் என்ற எங்களின் குற்றச்சாட்டு மேலும் வலுவடைகிறது.

50 க்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி பதிப்புகள் உள்ள நிலையில், இவைகளில் பெரும்பாலானவை அந்நியர்களால் எழுதப்பட்டவை என்பதும் சமீபத்திய உங்களின் பேச்சு கூட, தொடர்ந்து ஹிந்து கடவுள்களையும், இந்தியாவையும், ஹிந்துக்களையும் அவதூறாக, ஆபாசமாக சித்தரிக்கும் அமெரிக்காவின் வெண்டி டோனிகரின் புத்தகத்திலிருந்தே சொல்லப்பட்டது என்பதையும் நீங்கள் ஏற்று கொள்கிற நிலையில், சில நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அந்நிய நாடுகளின் சதிக்கு துணைபோகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை நான் பகிரங்கமாக முன்வைக்கிறேன்.

ஹிந்துக்கள் ஏற்காத, ஹிந்துக்களால் பின்பற்றப்படாத விஷயங்களை மேற்கோள் காட்டி, ஹிந்துக்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தால், இஸ்லாமியர்கள் மீதும், கிருஸ்துவர்கள் மீதும் எதிர்வினையாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு திட்டமிட்ட ரீதியில் நீங்கள் தவறான தகவலை அளித்ததோடு, உங்களின் அரசியல் உள்நோக்கத்திற்காக ஒட்டுமொத்த ஹிந்து பெண்களையும் அவதூறாக பேசி அவமானப்படுத்தியது குற்றமல்லவா? இது மலிவான அரசியல் என்பதோடு மதவாத அரசியல் என்பது தெளிவாகிறதல்லவா?

மேலும், இந்தியா என்பது ஒரே நாடு அல்ல பலநாடுகளால் இணைக்கப்பட்ட தேசம் என்றும், தமிழர்கள் தனி நாகரீக, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை கொண்டவர்கள் என்று திராவிட இயக்கங்கள் தொடர்ந்து கூறிவந்துள்ள நிலையில், தற்போது மனுநீதி அடிப்படையில் 2000 வருடங்களாக பெண்ணுரிமை பாதிக்கப்படுவதாக கூறுவது முரணாக இல்லையா? அப்படியானால், இந்தியா ஒரே தேசமாக இருந்தது என்று இதுநாள் வரை தாங்கள் கூறியது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? அல்லது இது நாள் வரை ஹிந்து மதம் குறித்து திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் கூறியது அனைத்தும் அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் என்பதை ஏற்று கொள்கிறீர்களா?

அமைதி பூங்காவான தமிழகத்தில் மதங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலவரங்களுக்கு வித்திட்டு, அரசியல் லாபமடைய பார்க்கும் உங்கள் கூட்டணியின் முயற்சியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு தவிடு பொடியாக்குவார்கள். அந்நிய தீய சக்திகளுக்கு துணை போகாமல், பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினராக,எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு மாநில மற்றும் தேச நலனில் அக்கறை செலுத்துங்கள். ஆக்கபூர்வ அரசியல் செய்யுங்கள்.

மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொள்கிறது.

  • நாராயணன் திருப்பதி,
    செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories