
பச்சை பயிறு மசாலா குழம்பு
தேவையான பொருட்கள்
பரிமாறும்: 4
பச்சை பயிறு 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் 1
கறிவேப்பிலை
சோம்பு
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மிளகு தூள்
பிரியாணி மசாலா
எண்ணெய்
கொத்தமல்லி
செய்முறைகள்
பச்சை பயிறை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த பயறு உடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பிறகு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து அரைத்த மாவை ஊற்றி இட்லி குகேரில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு,வெங்காயம் ,உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சிறிது நேரம் வேக வைக்கவும்.பிரியாணி மசாலா சேர்க்கவும்.
இப்போது இட்லி போல் உள்ள வேகவைத்த பச்சை பயறு ,சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் அதனை சேர்த்து சிறிது நேரம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்