
டெல்லி டிராக்டர் ராலி வன்முறையில்..ஒருவர் டிராக்டர்-ஐ வேகமாக ஓட்டி சென்று தடுப்பின் மீது மோதி வித்தை காட்ட முயன்றதில்…கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிகழ்வை அப்படியே தலைகீழாக மாற்றி…
விவசாயியை டெல்லி போலீஸ் நெற்றிப் பொட்டில் சுட்டதில் உயிரிழந்தார் என்று மாற்றி கூறியதுமில்லாமல்….விவசாயின் இத் தியாகம் வீணாகாமல் பார்த்துக் கொள்வோம் என்று பிற விவசாயிகள் கூறியதாக வேறு தூண்டிவிட்டு ட்விட்டரில் பதிவிட்டார் ..இந்தியா டுடே -ன் ராஜ்தீப் சர்தேசாய்.
அதோடு நிற்காமல்…இந்தியா டுடே தொலைக்காட்சியிலும்….இதே பொய் செய்தியை கூறினார்.
இதற்கு முன்னர்…ஜனாதிபதி திறந்துவைத்த நேதாஜி யின் புகைப்படம் குறித்த பொய் செய்தியை பரப்பிய கோஷ்டியிலும் வழக்கம் போல சர் தேசாயும் உண்டு.
இதனையடுத்து … மக்கள் வெகுண்டெழுந்து சுட்டிக்காட்டிய பின்.. ஒரு மாதம் சம்பளம் கிடையாது & இரண்டு வாரங்களுக்கு தொலைக்காட்சியில் செய்திகளை வாசிக்கவும், விவாதிக்கவும் தடை விதித்தது இந்தியா டுடே நிர்வாகம்.
[ இதனால் இந்தியா டுடே நிர்வாகம் நியாயமானது என்று எண்ணினால் அதை போன்ற அபத்தம் வேறில்லை ! இது…மக்களின் கோபம் காரணமாகவும், தொலைக்காட்சியை இழுத்து மூடிவிடக்கூடாது என்கிற நடவடிக்கை அச்சத்தினாலும் எடுக்கிற மேம்போக்கான நடவடிக்கை மட்டுமே. மற்றபடி…சர்தேசாய் கோஷ்டிகளுக்கு பொய்யும் புதிதில்லை. அவர்களை பணியிலமர்த்தி சோறு போடும் மீடியா நிறுவனங்களுக்கும் பொய் பரப்புதல் புதிதில்லை.]
இப்போது…ராஜ் தீப் சர்தேசாய் …இந்தியா டுடே -ல் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.
அனைத்துமே… மக்களின் கோபத்தினை தவிர்க்க … அரங்கேற்றப்படுகிற நாடகம் !
- பானு கோம்ஸ் ( Banu Gomes )