ரெடியாக அரை நிமிடம் தான்.. சுரைக்காய் அல்வா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Zucchini Alva - 2026

சுரைக்காய் அல்வா

தேவையான பொருட்கள்
பரிமாறும்: 3
சுரைக்காய் ஒரு கப்
சர்க்கரை 3 கப்
கிரீன் ஃபுட் கலர் சிறிதளவு
டூட்டி ஃப்ரூட்டி சிறிதளவு
முந்திரிபருப்பு 10
நெய்
மைதா மாவு கால் கப்
corn flour கால் கப்

செய்முறை
சுரைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து நன்கு மையாக எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் நீர் ஊற்றி 3 கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் கால் கப் மைதா மாவு மற்றும் கார்ன்ஃப்ளாரை நீர் சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்தக் கலவையில் மையாக அரைத்து வைத்த சுரைக்காயை சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவையை சர்க்கரை பாகில் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.( விருப்பப்பட்டால்) கிரீன் ஃபுட் கலர் சிறிதளவு நீரில் கரைத்து அதனுடன் சேர்க்கவும். கிளறும்போது நெய் முந்திரி பருப்பு டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கவும்.
நெய் வெளிப்பட்டு பாத்திரத்தில் அடிப்பிடிக்காமல் சுருண்டு வரும் வரை நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
அந்தவேளையில் நெய் தடவிய தட்டில் இதனை ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கவும். சுவையான இனிப்பான சுரைக்காய் அல்வா ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.