ஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

bro anilkumar11 - 2026ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை கணவர் ப்ரோ அணில் குமார் மீது பிணையில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பிரதர் அனில்குமார் நீதிமன்றத்தில் உடனே ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பிணையில் வெளிவர இயலாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதியப்பட்ட வழக்கு ஒன்றில், அனில் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால், கம்மம் நீதிமன்றத்தில் இருந்து கைது வாரண்ட் அனுப்பியுள்ளார் நீதிபதி. 2009இல் நடந்த தேர்தலின் போது, தேர்தல் நடத்தைகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக வழக்கு தொடர்ப்பட்டு, கம்மம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

bro anilkumar1 - 2026ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவின் கணவர்தான் பாஸ்டர் அனில் குமார். இவர், 2009 தேர்தலின் போது நடந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வராததால் அவரை உடனே ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஜே வாரெண்ட் கொடுத்துள்ளார். இதனால் அனில்குமார் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

2009 தேர்தலின்போது மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு  எதிராக அனில்குமார் நடந்து கொண்டார். கம்மம் நகரில் கருணகிரி என்ற சர்ச்சில் நடந்த நிகழ்ச்சியில் பாஸ்டர் ஆக இருந்த அனில் குமார் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடும்படி துண்டு சீட்டுகளை விநியோகம் செய்தார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

jagan relation baster1 - 2026இந்த வழக்கில் அனில்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. புதிதாக மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் திங்கள் அன்று அவர் நீதிமன்றத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகால பழைய வழக்கு என்பதால் பெரிதாக தொந்தரவு எதுவும் இருக்காது என்று அனில் குமார் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.