என்ன செய்யலாமா..? முலாம்பழ பன்னா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
melon panna
melon panna

முலாம்பழ பன்னா

தேவையானவை:

முலாம்பழம் – பாதியளவு
பனங்கற்கண்டுத்தூள் – 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
எலுமிச்சைச் சாறு – அரை மூடி

செய்முறை:

முலாம்பழத்தின் விதை மற்றும் தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை துருவி வைக்கவும். இந்தத் துருவலுடன் பனங்கற்கண்டுத்தூள், ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: பனங்கற்கண்டுக்குப் பதில் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.