melon salat
melon salat

முலாம்பழ சாலட்

தேவையானவை:
முலாம் பழம், தர்பூசணி, வெள்ளரிப் பழத்துண்டுகள் – தலா ஒரு கப்
சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்
புதினா இலைகள் – 5 (பொடியாக நறுக்கவும் )
தேன் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கொடுக்கப்பட்ட பழங்களின் தோல் மற்றும் விதைகளை நீக்கவும். மெலன் ஸ்கூப்பரால் (வட்ட வடிவ ஸ்பூன்) பழங்களின் சதைப்பகுதிகளை தோண்டி எடுக்கவும். பரிமாறும்போது தட்டில் சதைப்பகுதிகளின் மேலே சில்லி ஃப்ளேக்ஸை தூவவும். பிறகு உப்பு, எலுமிச்சைச் சாறு, தேன் பரவலாக சேர்க்கவும். இறுதியாகப் புதினா இலைகளை மேலே தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர்ந்த பிறகு பரிமாறவும்.

குறிப்பு: மெலன் ஸ்கூப்பர் இல்லாதவர்கள் பழங்களை சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending