தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம்; அரசு நிர்ணயம்!

Published:

covid19 ambulance - 2026

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் ….

கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.,க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாகச் செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.25 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஆக்ஸிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆ்ம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு 2 ஆயிரம் ரூபாய் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.50 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

அடுத்து, வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு ரூ.4 ஆயிரம் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.100 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Related articles

Recent articles

spot_img