1 லட்சம் தமிழக ‘சாலையோர வியாபாரி’களுக்கு ரூ.104 கோடி கடன்: மோடிக்கு அர்ஜுன் சம்பத் நன்றி!

Published:

hmk arjun sampath statement
hmk arjun sampath statement

1 லட்சம் தமிழக ‘சாலையோர வியாபாரி’களுக்கு ரூ.104 கோடி கடன் உதவி அளித்ததற்காக, பிரதமர் மோடிக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில்,

பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு இந்தியா நிதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.05 லட்சம் பேர்களுக்கு ரூ.103.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நகர்புற சாலையோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்கும் விதமாகமத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் அறிவித்ததுள்ளது.

நாடாளுமன்றத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் கேள்விக்கு மத்திய வீட்டு வசதி நகர்புற விவகாரத்துறை இணையமைச்சர் கௌசல் கிஷோர் இந்த பதிலை கொடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள நடைபாதை வியாபாரிகளின் சார்பில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

மேலும், மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தபட்டோர் பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலனடைகின்றனர். இதற்காக மருத்துவ கல்லூரிகளின் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு வருடங்களில் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 56% அதிகரித்துள்ளது. புதிதாக 179 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது. அதில் 229 அரசு கல்லூரிகள் ஆகும். இதன் மூலம் மருத்துவத்தில் இளநிலை முதுநிலை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை எடுத்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்து மக்கள் கட்சி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

மருத்துவ படிப்புகளில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்… என்று பிரதமர் மோடிக்கு அர்ஜுன் சம்பத் நன்றி தெரிவித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img