
சென்னையில் ஆக.,9 ம் தேதி வரை ஒன்பது இடங்களில் அங்காடிகள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பக்கத்து மாநிலங்களிலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் தொற்று பாதிப்பு சிறிது அதிகரித்து காணப்படுகிறது.
பெருநகர சென்னை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடை விதிக்கப்படுகிறது. இதன்படி பொது மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் ஆக.,9ம் தேதி வரை செயல்பட அனுமதி இல்லை. வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்!
திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை
புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்கலீன் சாலை வரை அங்காடிகள் செயல்பட தடை
வடக்கு உஸ்மான் ரோடு முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை உள்ள கடைகள்
ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை
அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவி.க பூங்கா சந்திப்பு வரை
என்.எஸ்.கே போஸ் சாலையில் குறளகம் முதல் தங்கசாலை வரை உள்ள அங்காடிகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை
ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை அங்காடிகள் செயல்பட தடை
கொத்தவால் சாவடி மார்க்கெட்ஆக.,1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் செயல்பட அனுமதியில்லை. இது குறித்து வணிகர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.