Karnataka Vegetable Sabzi
Karnataka Vegetable Sabzi

கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி

தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர். – 1 பூ
பட்டாணி. – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
கடுகு. – தேவையான அளவு

பொடி செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு. – 100 கிராம்
உளுந்தம் பருப்பு – 100 கிராம்
தனியா (மல்லி). – 150 கிராம்
சீரகம் – 150 கிராம்
வர மிளகாய் – தேவையான அளவு
பட்டை. – 25 கிராம்
இலவங்கம் (கிராம்பு) – 25 கிராம்
ஏலக்காய் – சிறிதளவு

(இதையெல்லாம் பொன்நிறமாக வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.)

செய்முறை :
காலிபிளவர் பூவை சுடுதண்ணீரில் கழுவி எடுத்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிதம் செய்து சிறிதாக வெட்டப்ப்பட்ட காலிபிளவர், தக்காளி மற்றும் பச்சை பட்டாணிப் போட்டு வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

வெந்த பின்னர் பொடியாக்கப்பட்ட பொருட்களை போட்டு இளம் சூட்டில் சிறிது நேரம் கிளறி விட்டால் மண மணக்கும் கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி ரெடி. சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending