கர்நாடக ஸ்பெஷல்: வெந்தய மோர்!

Published:

vendaya morkuzhambhu
vendaya morkuzhambhu

வெந்தய மோர்

தேவையானவை:

சற்றே புளிப்பான கெட்டி மோர் – ஒரு கப்
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
வறுத்துப் பொடித்த வெந்தயம் – கால் டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

மோரில் உப்பு, மஞ்சள்தூள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விளாவவும். கடுகு, சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை நெய்யில் ‘கமகம’ என தாளித்து மோருடன் சேர்க்கவும். பரிமாறும் முன் வெந்தயப் பொடி சேர்த்துப் பரிமாறவும்

Related articles

Recent articles

spot_img