spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைசிக்கலில் டிவிட்டர்; இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டியதால்... ரூ.100 கோடி அபராதம்?!

சிக்கலில் டிவிட்டர்; இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டியதால்… ரூ.100 கோடி அபராதம்?!

- Advertisement -

மேலும் ஒரு சிக்கலில் ட்விட்டர்… இம்முறை இந்திய வரைபடத்தை தவறாக காட்டியிருக்கிறது ட்விட்டர்.

சென்ற வருடம் இதே தவறை செய்து – ஜம்மு காஷ்மீர் லடாக்கை சீனாவின் பகுதிகளாக காட்டி – மன்னிப்பு கேட்டது.

உத்தரபிரதேசத்தில் பஜ்ரங் தள் தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ட்விட்டர் இண்டியாவின் தலைமை நிர்வாகியான மனீஷ் மஹேஷ்வரி மீது வழக்கு பதிவு!

ஏற்கனவே போலி செய்தி வெளியிட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சித்த விவகாரத்தில் ட்விட்ட இண்டியா (மனீஷ் மஹேஷ்வரி) மீது வழக்கு பதியப்பட்டது. முன் ஜாமீன் வாங்கியிருக்கிறார்.

தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகம் இந்திய சட்டத்தை அவமதித்து வருவதால், ட்விட்டர் இண்டியா சமீபத்தில் நியமித்த “grievance officer” தர்மேந்திரா சதுர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார் (ஒரே வாரத்தில்). ட்விட்டர் செய்யும் தவறுகளுக்கு இவர் சிறை செல்ல தயாராயில்லை போல தெரிகிறது.

அடுத்து முற்போக்கு மூடன் மனீஷும் ராஜினாமா செய்ய வாய்ப்பு.

இதே நிலை நீடித்தால், ட்விட்டர் இண்டியாவில் ஒரு பயல் வேலைக்கு போக மாட்டான். அத்தனை பேரும் ராஜினாமா செய்து வீட்டுக்கு போய்விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த மூடர்கள், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதின் ட்விட்டர் பக்கத்தை ஒரு மணி நேரம் முடக்கினார்கள் சமீபத்தில். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்: “2017இல் அவர் பகிர்ந்த பதிவு காப்பிரைட் சட்டத்துக்கு விரோதமானது” என. மூடர்களே… 2017 பதிவுக்கு ஏன் 2021இல் நடவடிக்கை? அப்படி நடவடிக்கை எடுப்பதனாலும் புதிய சட்டப்படி பதிந்தவரிடம் விளக்கம் கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கலாம் என்ற விதியை மீறியிருக்கிறார்கள். இதற்கும் ஒரு தண்டனை கிடைக்கும்.

ட்விட்டர் இது வரை பாஜக – ஆர்.எஸ்.எஸ் – இந்து தலைவர்களது பதிவுகளை மட்டுமே நீக்கியிருக்கிறது என்பதிலிருந்து, அது இந்தியாவிரோத, இந்துவிரோத “கட்சி” போல நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவு. இந்த Tech Giantsதான் இக்கால கிழக்கிந்திய கம்பெனி!

வணிகம் செய்ய வந்து அவன் சட்டத்தை நம் மீது புகுத்தினான் கிழக்கிந்திய கம்பெனி அன்று.

வணிகம் செய்ய வந்து அவன் சட்டத்தை நம் மீது புகுத்த முயற்சிக்கிறான் இந்த Tech Giants கிழக்கிந்திய கம்பெனி இன்று.

அவர்கள் ஆசை நிறைவேறாது மோதி ஆட்சியில்.

கூடுதல் தகவல்: தவறான வரைபடத்தை வெளியிட்டால் அதற்கு ரூ 100 கோடி அபராதம் + 7 ஆண்டு சிறை 😉

Twitter India Managing Director Manish Maheshwari has been booked under Section 505 (2) of IPC and Section 74 of IT (Amendment) Act 2008 for showing wrong map of India on its website, on complaint of a Bajrang Dal leader in Bulandshahr

  • செல்வ நாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe