
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஓர் ஆஸ்திரிய கணித முனைவர் பட்டம் பெற்றுள்ள அறிவியலாளர் அன்னா கீசென்ஹோஃபர் மகளிர் சைக்கிள் ஓட்டுதல் சாலை ரேஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த பெண்கள் ஒலிம்பிக் சாலை பந்தயத்தில் ஆஸ்திரிய கணிதவியலாளர் அன்னா கீசென்ஹோஃபர் ஒரு தங்கத்தை வென்றார்.
அப்போட்டியில் மூத்த டச்சு வீராங்கனை அன்னிமீக் வான் வுலூட்டன் தான் வென்றதாக தவறாக நினைத்தார். 30 வயதான தேசிய நேர சோதனை சாம்பியன் கீசென்ஹோஃபர், வியட்னா மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் படித்த காடலோனியாவின் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் வெற்றிக்கனியைப் பறித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளும் விளையாட்டுகளில் பங்கேற்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். யாருக்கு தெரியும்? ஒருநாள் நீங்கள் அறிவியல் பூர்வமாக ஒலிம்பிக்கில் பங்கெடுத்து தங்கம் வெல்லலாம்.
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்