spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇந்தியாவின் பெருமித அடையாளம்!

இந்தியாவின் பெருமித அடையாளம்!

- Advertisement -

இந்தியாவின் பெருமித அடையாளங்களில் ஒருவரான வாஜ்பாயின் நினைவு நாள் இன்று. வாஜ்பாய் சுதந்திர போராட்ட தியாகி, ஈரோட்டு ராம்சாமியும் அண்ணாதுரையும் கருணாநிதியும் வெள்ளையன் போக கூடாது என அவன் காலை கட்டி கதறிய காலங்களிலே அவர் நாட்டுக்காய் சிறை சென்ற தியாகி.

காந்தியின் பெரும் போராட்டமான “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டு தண்டனையும் பெற்றவர், அடிப்படையில் அவர் காமராஜரை போல் காந்தியவாதி. ஆனால் தேசபிரிவினை அவர் மனதை பெரிதும் பாதித்த நிகழ்வு, உன்மையான தேசாபிமானிகளுக்கு அது வலி அந்த வலி வாஜ்பாய்க்கும் இருந்தது

இந்நாட்டு இந்துக்களுக்கும் இந்து மக்களுக்கும் இழைக்கபடும் அநீதி அவருக்கு பெரும் வருத்தம் கொடுக்க செய்து ஜனசங்கம்பால் தன் கவனத்தை திருப்பினார். நேருவின் காலங்களில் வாஜ்பாய் தன் கடமையினை ஜனசங்கத்தில் இருந்து செய்துகொண்டே இருந்தார், நாட்டுக்கான குரல் அவரிடம் இருந்து வந்துகொண்டே இருந்தது.

நேரு மட்டுமல்ல இந்தியாவே மதித்த ஜனசங்க தலைவர்களில் ஒருவராக இருந்தார் வாஜ்பாய், அவரின் இயல்பான அமைதி குணமும் நாட்டுபற்றும் அவருக்கு நற்பெயரை பெற்றுகொடுத்தன‌
மிசா காலத்தின் அடக்குமுறையில் வாஜ்பாயும் சிக்கினார், அப்பொழுதுதான் காங்கிரஸை அகற்ற பாடுபட்ட கருணாநிதியுடன் அவருக்கு ஒரு புரிதலே வந்தது.

காங்கிரஸை குழிதோண்டி புதைக்க பாடுபட்டுகொண்டிருந்த கருணாநிதி வாஜ்பாயுடனும் நட்பு பாராட்டினார். மிசா காலத்திற்கு பின் இந்திய அரசியலில் பல கட்சிகள் உருவாயின, ஜனதா ஆட்சிக்கும் வந்தது அந்த ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சராக அமர்ந்தார் வாஜ்பாய்.

vajpayee putin modi1
vajpayee putin modi1


முதன் முதலில் நாட்டு பாதுகாப்பில் துணிச்சலான முடிவுகள் எடுத்தவர் அவரே, இஸ்ரேலுடன் உறவை தொடங்கிய முதல் இந்திய அரசியல்வாதி அவர்தான்.

அவர்காலத்தில்தான் இஸ்ரேலின் சிங்கம் மோசே தயான் இந்தியா வந்ததும், பாகிஸ்தான் அணுவுலை மேல் இந்தியாவிலிருந்து தாக்குதல் நடத்த அனுமதி கோரிய விஷயங்களும் நடந்தன‌
வாஜ்பாய் அந்த சவாலை எடுத்தார், நிச்சயம் சிரிய , ஈராக்கிய அணுவுலை போல பாகிஸ்தானை முளையிலே கிள்ளி இருக்கலாம், ஆனால் மொரார்ஜி தேசாய் அனுமதிக்கவிலை
எனினும் வாஜ்பாயின் துணிச்சலான முயற்சி சிலாகிக்கபட்டது
1980களில் பாஜக மதவாத கட்சி என அறியபட்டாலும் வாஜ்பாயின் மென்மையான மேன்மையான குணமும், இந்துக்களின் உணர்வுகளை அவர் விளக்கி நின்றதும் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஈழவிவகாரங்களில் கருணாநிதியுடன் ஒற்றுமையாக நின்ற வாஜ்பாயினை மறக்க முடியாது, ராஜிவ் கொலைக்கு பின்பே வாஜ்பாய் ஒதுங்கினார்

ஏதோ பெரும் தீவிரவாத இயக்கம் போல் கருதபட்ட‌ பாஜகவின் சிக்கலான காலங்களை வாஜ்பாய் எனும் பெரும் மனிதனின் துணையுடனே அக்கட்சி கடந்து சென்றது. காங்கிரஸுக்கு சோனியா தலமை ஏற்கா காலங்களில் வலுவான அகில இந்திய கட்சி இல்லா சூழலில் பாஜக தனிபெரும் கட்சியானது, அப்பொழுது பிரதமரானார் வாஜ்பாய். அவர்களுக்கு அதிமுக ஆதரவு கொடுத்தது, கருணாநிதி இங்கு முதல்வராக இருந்தார்.

ஜெயலலிதாவிற்கு தமிழக அரசியல் புரிந்த அளவு டெல்லி அரசியில் பிடிபடவில்லை, அங்கு அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 1989ல் ராஜிவினை வற்புறுத்தி கருணாநிதி அரசை கலைத்த ஜெயலலிதா, வாஜ்பாயிடமும் அதே கோரிக்கையினை வைத்தார். 1989ல் புலி அராஜகம் போல் நிலமை பின்னாளில் இல்லை என்பதை உணர்ந்த வாஜ்பாய் மறுத்தார். வாஜ்பாய் மாமனிதனாக உயர்ந்து நின்றது அக்கணமே!

நியாயத்துக்கு எதிராக எதையும் செய்யமாட்டேன் எனும் அந்த குணத்திலே இருந்தார். ஆட்சியே இல்லை என்றாலும் கருணாநிதி ஆட்சியினை கலைக்கமாட்டேன் என முடிவோடு நின்றார். ஜெயாவின் பிடிவாதத்தில் ஆட்சி கலைந்து தேர்தல் வந்தது.

இந்திய அரசியலில் குழப்பமான மிக மிக மோசமான காலகட்டங்கள் அவை. பின்னர் வந்த தேர்தலில் பாஜகவினை கருணாநிதி அரசியல் தர்ம படி, நன்றி ஆதரித்தார், வாஜ்பாய் பிரதமரும் ஆனார், திமுகவின் முரசொலி மாறனை மறக்காமல் மந்திரி ஆக்கி கொண்டார் கருணாநிதி. அவரின் அரசியல் அப்படித்தான், நன்றி காட்டலிலும் கைமேல் பலன் இல்லாமல் காட்டவே மாட்டார்.

வாஜ்பாயின் காலங்களில் சவாலும் இருந்தன, அணுகுண்டு சோதனையினை நடத்தினார், அதன் எதிர் விளைவாக பாகிஸ்தானும் அணுகுண்டு வெடிக்க தயாராயிற்று
பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருப்பதை இப்படி தந்திரமாக காட்டினார் வாஜ்பாய். ஒருவகை ராஜ தந்திரம் இது.

1974க்கு பின் மிக சக்திவாய்ந்த அணுஆயுதம் இந்தியாவிடமும் உண்டு என காட்டிய நிகழ்வு அது என்றாலும் பல நுணுக்கமும் ராஜதந்திரமும் இருந்தன‌. அதே நேரம் பாகிஸ்தானுடன் அவர் உறவு பாராட்டினார், லாகூர் பஸ் திட்டமும், இன்னும் சில ஒப்பந்தங்களும் அவரை இன்னொரு நேருவாக காட்டின‌.

Vajpayee
Vajpayee

ஆனால் பாகிஸ்தான் தன் கோரமுகத்தை கார்கில்லில் காட்ட அதையும் துணிச்சலாக சந்தித்து வெற்றிபெற்றார் வாஜ்பாய்.
அவர் காலங்கள் அல்கய்தா எனும் பெரும் பலம்வாய்ந்த இயக்கம் உலகை ஆட்டுவித்த காலம், அமெரிக்காவே அலறிய காலம்.
இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருந்தது, பார்லிமென்ட் வரை தாக்கினார்கள், இத்தேசம் பெரும் சிக்கலான அந்த காலங்களிலும் வாஜ்பாயின் தலமையில் அமைதி காத்தது அசம்பாவிதங்களை தவிர்த்தது.

இப்போது உள்ள டிரம்ப் போலவோ பெரும் நட்புள்ள நாடுகளோ அன்று இந்தியாவுக்கு இல்லை. காலம் கனியவில்லை. அந்த காந்தகார் விமான கடத்தல் சம்பவங்கள் எல்லாம் வாஜ்பாய் காலத்தில் தேசத்திற்கு வந்த சோதனைகள், அதனையும் அமைதியாக சந்தித்தார் வாஜ்பாய்.

வாஜ்பாயின் காலங்களில் 1998ல் உலக பொருளாதார பாதிப்பு வந்தது, ஆனால் இந்தியா அசையா வண்ணம் வாஜ்பாயின் நடவடிக்கை இருந்தது. வாஜ்பாய் ஆட்சியில் தீவிரவாதம், மதவாதம், அன்னிய சக்திகளின் அட்டகாசம், என ஏகபட்ட சவால்கள் இருந்தன எல்லாவற்றிலும் வென்ற வாஜ்பாய்க்கு இந்த குஜராத் சர்ச்சைகள் சறுக்கலை கொடுத்தன‌.

நிச்சயம் இந்திராவிற்கு அடுத்து பல சவால்களை எதிர்கொண்ட பிரதமர் யாரென பார்த்தால் வாஜ்பாயினை சொல்லலாம். மோடிக்கு முன் அதிக சவால்களை அவர்தான் எதிர்கொண்டார்.
கார்கில் முதல் பார்லிமென்ட் தாக்குதல், திட்டமிட்ட குஜராத் கலவர தொடக்கமான அந்த ரயில் எரிப்பு, பீகாரில் அந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் எரிப்பு எல்லாம் அவருக்கு எதிரான அஸ்திரங்கள்
அதாவது பாஜக ஆட்சியில் இந்தியா எரிகின்றது என்பது போன்ற நிலையினை கொண்டுவர செய்யபட்ட சதிகள், மத கலவரங்களை ஏற்படுத்த செய்யபட்ட திட்டங்கள்…. ஆனாலும் சமாளித்து இத்தேசத்தில் பெரும் கொந்தளிப்பு வராவண்ணம் நடத்தி சென்றார் வாஜ்பாய், மறுக்க முடியாது.

பல கருப்பு சக்திகளின் சவாலை, இந்த தேசம் எரியவேண்டும் என்ற அவர்களின் கொடூர ஆசையினை மிக இயல்பாக அதே நேரம் பொறுப்பாக கடந்து தேசத்தை நடத்திய அந்த வாஜ்பாய் இந்திய வரலாற்றின் சிறப்பான பிரதமர்களில் ஒருவர்
நேரு, இந்திரா, ராஜிவிற்கு பின் வாஜ்பாயினை அந்த வரிசையில் தாராளமாக சேர்க்கலாம்.

vajpayee advani fernandas
vajpayee advani fernandas

நாட்டு பாதுகாப்பிற்காக இலங்கையில் ஆனையிறவில் புலிகள் பெற்ற பெரும் வெற்றியினை கூட செல்லாகாசு ஆக்கியவர் வாஜ்பாய், பிரபாகரனின் திட்டத்தினை உரிய நேரத்தில் முறியடித்து இந்தியா என்பது ராஜிவோடு முடியாது என பட்டவர்த்தனமாக புலிகள் முகத்தில் அறைந்து சொன்னவர்.

ஒரு விஷயத்தில் எல்லா இந்தியரும் அவரை வணங்கியே தீரவேண்டும் … அது இந்த தங்க நாற்கர சாலை திட்டம்… இந்தியாவின் நரம்புகளான அந்த சாலைகளை பிரமாண்ட சாலையாக மாற்றும் திட்டத்தை அவர்தான் கொடுத்தார்.இன்று இந்தியாவினை மாற்றிபோட்டிருக்கும் அந்த வசதியான சாலைகள் அவர் கொடுத்தது.

தன்னை போலவே திருமணம் செய்யாமல் நாட்டுக்காக உழைத்த உத்தமரான கலாமினை ஜனாதிபதியாக்கி கவுரவபடுத்தியதில் வாஜ்பாயின் பங்கு இருந்தது. கலாம் சீரியல் ஏவுகனைகள் என இந்திய ஏவுகனை திட்டத்திற்கு பெயர் சூட்டியதும் வாஜ்பாயே…

மிக சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் காங்கிரசுக்கு காமராஜர் எப்படியோ அப்படி பாஜகவிற்கு வாஜ்பாய். காமராஜருக்கும், வாஜ்பாய்க்கும் வித்தியாசம் ஏதும் நீங்கள் காட்டிவிட முடியாது. இருவரும் கட்சிகள் கொள்கைகள் வேறாயினும் இந்நாட்டிற்காக வாழ்ந்தவர்கள்

அவ்வகையில் பாஜகவின் பீஷ்மர் வாஜ்பாய். இன்று பாஜக தேசிய கட்சி, இத்தேசத்தின் பெரும்பான்மை மக்களின் அபிமானத்தை பெற்றுவிட்ட கட்சி அசைக்கமுடியா இடத்துக்கு சென்றுவிட்ட கட்சி, அதற்கு காரணம் வாஜ்பாய். அக்கட்சிக்கு எப்படிப்பட்ட மனிதர் தலைவராக வரவேண்டும் என கேட்டால் எல்லா மக்களும் ஏன் எதிர்கட்சிகள் கூட வாஜ்பாய் போல் மிக பொறுப்பான மனிதரே வரவேண்டும் என ஒருசேர சொல்வார்கள் அதுதான் வாஜ்பாயின் வெற்றி.

Atal Bihari Vajpayee Indira Gandhi
Atal Bihari Vajpayee Indira Gandhi

அண்ணாதுரையின் பக்குவமான இடத்தை கருணாநிதி ஏற்றது போல, வாஜ்பாயின் பக்குவமான இடத்தை மோடி பெற்றுவிட்டார்.
அவ்வகையில் அக்கட்சியில் அவரின் இடம் வெற்றிடம் ஆகாது, அவரை கட்சியும் இத்தேசமும் நினைவு கூர்ந்துகொண்டே இருக்கும். நீண்ட ஓட்டத்தை இத்தேசத்திற்காக ஓடி விடைபெற்ற அந்த பீஷ்மருக்கு அஞ்சலிகள்…

அவர் வழியில் நல்ல தலைவர்கள் பாஜகவிற்கு வரட்டும், இத்தேசத்தை அவர் வழியில் ஆளட்டும். வாஜ்பாய் இங்கு பல இடங்களில் இன்னும் வழிகாட்டுகின்றார், அவர் விரும்பியபடி தேசம் இன்று ராமர் கோவிலை அமைத்திருக்கின்றது. ஒரு சச்சரவு சண்டை இன்றி அது அமையவேண்டும் என எப்படி விரும்பினாரோ அப்படி அமையப் பெற்றது!

1970களிலே இஸ்ரேல் உறவுக்கு அடித்தளமிட்டவர் வாஜ்பாய், அதில்தான் இன்று பால்கோட் தாக்குதலையும் லடாக் அதிரடிகளையும் செய்ய முடிகின்றது, இஸ்ரேலிய ஆயுதங்கள் இன்று எல்லையினை காக்க அவரே அஸ்திவாரமிட்டார். நவீன அணுகுண்டை வெடித்தவரும் அவரே, பாகிஸ்தானுக்கு உறவு கரம் நீட்டி அந்த கரத்தில் பாகிஸ்தான் சூடு வைத்ததும் கார்கிலில் அடித்து விரட்டியவரும் அவரே!

அவரின் பொருளாதார திட்டங்கள் பலம் வாய்ந்தவை, கத்தாரில் முரசொலிமாறன் பேசிய பேச்சுக்களின் அடிநாதம் வாஜ்பாயின் முடிவே, அரபு இந்திய தொழிலும் உறவும் அதில்தான் புத்துயிர் பெற்றது! இந்தியர் ஒவ்வொருவரும் அவரை நினைத்து பார்க்க வேண்டிய விஷயம் அந்த தங்க நாற்கரம்! கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு செல்ல 21 மணி நேரமான விஷயம் இப்பொழுது 11 மணி நேரமாக குறைந்திருக்கின்றது!

இந்தியா எங்கும் நினைத்த நேரம் நினைத்த இடத்துக்கு செல்லும்படி மகா பிரமாண்டமான சாலைகளை அவர்தான் அமைத்தார்! அந்த ஒரு விடயத்துக்காவது நாம் நன்றி செலுத்தியே தீரவேண்டும்! இந்தியாவின் இரண்டாம் காலத்தை அதாவது காங்கிரசின் வீழ்ச்சிக்கு பின்னரான காலத்தின் பிதாமகன் வாஜ்பாய் அவர் வழியிலேதான் மோடி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கின்றார்!

vajpayeeji
vajpayeeji

முன்பே சொன்னபடி பாஜக ஆட்சி வந்தால் என்னென்ன ஆகும் என்பதை கோடிட்டு காட்டிச் சென்றவர்! வாஜ்பாய். காஷ்மீர் கார்கில் குஜராத், பீகாரில் ஸ்டெயின்ஸ் என எங்கெல்லாமோ யார் யாரையெல்லாமோ எரித்து சுடுகாடு ஆக்குவோம் என கொக்கரித்தார்கள்… அதில்தான் அமைதியாக பாடம் படித்தார் மோடி, வாஜ்பாய் எதிர்கொண்ட சவாலை எல்லாம் நோக்கி கொண்டே இருந்தார்!

ஆம், மோடி எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை எல்லாம் அன்றே எதிர்கொண்டு அவற்றை தடுக்க வழியும் சொல்லி புன்னகையுடன் சென்றார் வாஜ்பாய்! வாஜ்பாய் சுமந்த வலியும் கண்ணீரும் மோடி சுமக்க வேண்டியது!

ஆலகால விஷத்தை சிவன் உண்டது போல அந்த ஆபத்துக்களை சந்தித்து தேசத்தை காத்தவர் வாஜ்பாய், இல்லை அந்த விஷம் மோடியினைத்தான் தீண்டியிருக்கும்! வாஜ்பாய் அப்படி காத்ததனாலே மோடியால் அமைதியாக ஆள முடிகின்றது, தேசம் அமைதியாக பல சாதனைகளை செய்கின்றது~!

பாராளுமன்றத்தில் வாஜ்பாய் ராமர் கோவில் காஷ்மீர் அக்சாய் சின் என எதையெல்லாம் குறித்து வாதிட்டாரோ அதெல்லாம் நடந்து கொண்டிருகும் நேரம் வாஜ்பாயின் ஆன்மா மகிழ்ந்து இத்தேசத்தை ஆசீர்வதித்து கொண்டிருக்கும்! ஆம் அவரின் கனவும் உழைப்பும் கோரிக்கையும் அவ்வளவு உன்னதமாய் இருந்திருக்கின்றன , இதோ நிறைவேறிற்று!

atal bihari vajpayee ji
atal bihari vajpayee ji

தேசம் அந்த நன்றியில் அப்பெருமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்திகொண்டிருக்கின்றது… ஜெய் ஹிந்துஸ்தான்.. வந்தே மாதரம்

(இன்று வாஜ்பாய் இருந்திருந்தால் கருணாநிதி இறுதி அஞ்சலிக்கும், அவரின் பட திறப்புக்கும் முதல் ஆளாக வந்திருப்பா வாஜ்பாய்! ஆனால் இந்த இரு நிகழ்வுகளிலும் 10 வருட காலம் திமுக கூட்டணி அரசின் தலைவராக இருந்த மன்மோகன்சிங் வரவே இல்லை ஏன்? அந்த அளவுதான் மன்மோகனின் சகிப்புதன்மை, ஆனால் வாஜ்பாய் இருந்திருந்தால் கட்டாயம் வந்திருப்பார் காரணம் அவரின் சகிப்பு தன்மை அளவிடமுடியாதது, அதுதான் வாஜ்பாய்
அடல் பிஹாரி வாஜ்பாய் )

  • ஸ்டான்லி ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe