samai carrot dhosai
samai carrot dhosai

கேரட் சாமை தோசை

தேவையான பொருட்கள்:
சாமை, புழுங்கலரிசி – தலா 100 கிராம், உளுந்து – 50 கிராம்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
கேரட் – 2, தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள்,உப்பு,எண்ணெய் -தேவைக்கேற்ப.
செய்முறை:
கேரட்டைத் தோல் சீவி நறுக்கி வைக்கவும். சாமை, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் இதனுடன் நறுக்கிய கேரட்டைச் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அரைத்த மாவில் தயிர் கலந்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கரைத்து தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: தயிர் சேர்த்துச் செய்வதால் மாவைப் புளிக்கவிட வேண்டியதில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending