morkuli
morkuli

மோர்க்களி

தேவையானவை:
இட்லி அரிசி – 200 கிராம்,
புளித்த தயிர் – 100 மில்லி, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
மோர் மிளகாய் – 2,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம்ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை சேர்க்கவும். கடுகு கொஞ்சம் வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அரிசி மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கரைத்து இதில் விட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: ஒரு பெரிய பிளேட்டில் இதனைப் போட்டு ஆறிய உடன் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending