
டாங்கர் பச்சடி
தேவையானவை:
உளுத்தம்பருப்பு – 100 கிராம்,
கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
தயிர் – ஒரு கப்,
எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை மிக்ஸியில் நைஸாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடுகு, சீரகத்தை எண்ணெயில் தாளித்து சேர்த்துக் கலந்து, பரிமாறவும்.



