புல்வாமா போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும்: நாங்கள் தாக்குவோம்: மிரட்டுகிறார் இம்ரான் கான்!

Published:

370 வது பிரிவை ரத்து செய்தல் மற்றும் ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பது ஆகியவை தொடர்பாக இந்தியாவின் உள் விவகாரத்தில் பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “புல்வாமா போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும்” என்று இந்தியாவை மிரட்டியுள்ளார்.

காஷ்மீருக்கான விசேஷ அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை திரும்பப் பெற்றுக் கொண்டது இந்திய அரசு. இதுகுறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான், புல்வாமா போன்ற ஒரு பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடக்கும் என்று நான் முன்கூட்டியே கூற முடியும். ஆனால் அவர்கள் மீண்டும் எங்கள் மீது பழியைப் போட முயற்சிப்பார்கள். அவர்கள் எங்களை மீண்டும் தாக்கக்கூடும், நாங்கள் மீண்டும் தாக்குவோம்.” என்று கூறினார்.

இந்தியாவின் நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானின் பதிலை உலகுக்குச் சொல்வதற்காக செவ்வாய்க் கிழமை இன்று தேசிய அவையின் கூட்டுக் கூட்டத்தில் இம்ரான் கான் உரையாற்றினார்!

காஷ்மீருக்கான 370 வது பிரிவை திரும்பப் பெறுவதற்கான இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தானின் பதில் குறித்து விவாதிக்கப் பட்டது. அப்போது அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார்கள். நான் ஆட்சிக்கு வந்ததும், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதே எனது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று நான் கூறியிருந்தேன்.” என நினைவு கூர்ந்தார்.

ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியாவுடனான எனது முதல் தகவல் தொடர்புகளில், அவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளைப் பற்றி கவலை தெரிவித்தனர். ராணுவப் பள்ளி படுகொலைச் சம்பவத்துக்கு பின்னர், பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் அமைப்புகளும் தங்கள் நிலங்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த விடமாட்டோம் என்று உறுதியளித்ததாக நான் மோடிக்கு உறுதியளித்தேன்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

இருப்பினும், இந்திய தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டுவதாக உணர்ந்தேன். பிக்‌ஷேக்கிற்கான எனது பயணத்தில் எனது சந்தேகங்கள் உறுதியாயின! அங்கு இரு நாடுகளுக்கிடையேயான நெருக்கடியான உறவுகளைப் பற்றி பேச இந்திய தரப்பு விருப்பம் காட்டவில்லை” என்றார் இம்ரான் கான்!
 
இந்திய ஆட்சியாளர்கள், இந்து மேலாதிக்கத்தையும், ஜம்மு-காஷ்மீரை பிளவுபடுத்துவதையும், 370 வது பிரிவை அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்…

இந்துக்களை மற்ற மதங்களுக்கு மேலானதாக, ஓர் ஆதிக்கசக்தியாக வைத்துக் கொண்டு, சிறுபான்மையினரை நசுக்குவதன் மூலம் அவர்களை அடிபணிய வைப்பதை நோக்கமாகக் கொண்டதுதான் அவர்களின் உறுதியான சித்தாந்தத்தின் வெளிப்பாடு! காஷ்மீரில் நடந்தது அவர்களின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகிறது. அவர்கள் இனவாதிகள் என்றார் இம்ரான் கான்.

பல முறை தோல்வியடைந்த பின்னர் காஷ்மீரை நோக்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மற்றொரு முயற்சியாக, “காஷ்மீர் மீது இந்தியா இப்போது தங்கள் இறுக்கத்தை தீவிரப்படுத்தும். இதனால் புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவங்கள் ஏற்படும். அவர்கள் எங்கள் மீது பழி சுமத்துவார்கள். நாங்கள் பதிலடி கொடுப்போம், இரு நாடுகளும் போருக்குச் செல்லும், இது உலகின் பிற பகுதிகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது அணுசக்தி அச்சுறுத்தல் அல்ல. இந்த விஷயத்தை உலகத் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்திய அரசாங்கத்தால் முஸ்லிம்கள் அடக்கப் படுவது குறித்து மேற்கத்திய உலகிற்கு தெரிவிப்பேன்.” என்றார் இம்ரான் கான்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

இம்ரான் கானின் இந்த மிரட்டல் பேச்சு, பாகிஸ்தான் தனது நிலத்திலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளைத் தடுத்து நிறுத்துவதாக பாசாங்கு செய்வதையும், பங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாகவும் உறுதியுடனும் இருப்பதாக சொன்னதெல்லாம் பொய் என்றும் வெளிப்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் 40 இந்திய வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதல் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை தாங்கள் தான் முன்னின்று நடத்தினோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இம்ரான் கானின் பேச்சு.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img