ஜம்மு காஷ்மீர் குறித்த தீர்மானம்… மக்களவையில் பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றம்!

Published:

reorganisation debate minister jammu kashmir speaks during - 2026

ஜம்மு – காஷ்மீர் குறித்த தீர்மானம் நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை ஆதரவில் இன்று நிறைவேறியது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 351 உறுப்பினர்களும், எதிர்த்து 72 உறுப்பினர்களும் வாக்களிக்க, ஒருவர் நடுநிலை  வகித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான விசேஷ அந்தஸ்தை அளிக்கும் சட்டப் பிரிவுகள் 370, 35 ஏ ஆகியவை திரும்பப் பெற்றுக் கொள்ளப் படுவதாக, நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அறிவித்தார். நேற்று மாநிலங்களவையில் இது நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில், இன்று விவாதத்துக்குப் பின் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டது.

காஷ்மீர் விஷேச அந்தஸ்து அளிக்கும் 370 & 35-A பிரிவுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவதற்கான அறிக்கை மற்றும் 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று  நிறைவேறியது

இவற்றுக்கு ஆதரவாக – 351, எதிர்ப்பு தெரிவித்து – 72, புறக்கணிப்பு – 1 என பதிவாகின.  (மொத்தம் – 424)

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

அது போல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்-ஐ யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மக்களவையில் நிறைவேறியது. இதற்கு ஆதரவாக – 366, எதிர்த்து – 66, புறக்கணிப்பு – 1 என மொத்தம் -433 வாக்குகள் பதிவாயின.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img