பொடி இட்லி
தேவையானவை:
இட்லி மாவு – ஒரு கப்,
எண்ணெய் – தேவையான அளவு.
பொடி செய்ய:
கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, கறுப்பு எள் – தலா 4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
உப்பு, பெருங்காயத்தூள் – தேவைக்கேற்ப.
செய்முறை:
பொடி செய்யக் கொடுத்த பொருட்களை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆறவிடவும். பிறகு மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும். இட்லி மாவை இட்லிகளாக செய்து எடுக்கவும். பொடியுடன் எண்ணெய் சேர்த்துக் குழைக்கவும். இட்லிகளை இருபுறமும் நன்கு பொடியில் தடவி எடுத்து பரிமாறவும்.