ஆரோக்கிய சமையல்: வரகரிசி உளுந்து கஞ்சி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
varaku ural kantchi
varaku ural kantchi

வரகரிசி உளுந்து கஞ்சி
தேவையான பொருட்கள்
வரகரிசி‍‍‍‍‍‍ – 100 கிராம்
தோலுடன் கூடிய‌ உளுத்தம்பருப்பு – 25 கிராம்
வெந்தயம் – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
முழுப்பூண்டு – 2
தேங்காய் துருவல் – அரை கப்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, கொதிக்கும் நீரில் போடவும்.
சற்று நேரம் ஆகி பாதி வெந்ததும் வரகரிசியை கல் நீக்கி சேர்க்கவும்.
அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும்.
பின்னர் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்தல்
நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.
கஞ்சியாக‌ வைத்து எள்ளுத்துவையல் வைத்து சாப்பிடலாம்.

Leave a Reply