
மேகவலி குறைய…
ஆமணக்கின் வேரைத் தூள் செய்து சம எடை சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகையளவு காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வர உடம்பிலுள்ள மேகவலிகள் குறைந்து மூளை பலப்படும்.
மேக வியாதி உள்ளவர்கள் வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூள் இரண்டு பங்கு. சர்க்கரை ஒரு பங்கு சேர்த்து காலை, மாலை ஒரு சிட்டிகையளவு நெய்யில் குழைத்து சாப்பிட குணமாகும்.
மேக நோயுள்ளவர்கள் அடிக்கடி தக்காளிப் பழம் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தியாகும். சிறுநீர் வியாதி விலகும். இரைப்பை வியாதிக்கும் ஏற்றது.
யானைக்கால் வியாதிக்கு…
பப்பாளிப் பழச்சாற்றை உலர்த்தித் தூள் செய்து ஐந்து கிரெய்ன் அளவுள்ள மாத்திரைகளாகச் செய்து யானைக் கால் வியாதிக்குக் கொடுத்து வரலாம். பப்பாளி இலையை அரைத்து வெளிப்பூச்சாக பற்றிடலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
யானைக்கால் ஜூரமா?
9 குப்பைமேனி இவையுடன் 6 மிளகையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பசும்பால் குடிக்கவும். தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள் சாப்பிட குணமாகும். அத்தினங்களில் அவசியம் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்.
வயிற்றுப் போக்கிற்கு…
நீண்டகால வயிற்றுப் போக்கிற்குத் திராட்சை விதைகளைச் சேகரித்துத் தூள் செய்து காற்றுப் புகாத பாட்டில்களில் வைத்துக் கொண்டு ஐந்து கிரெய்ன் அளவு காலையும் மாலையும் வெண்ணெய் அல்லது நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் தெரியும்.
வயிற்று வலி, சீதபேதி, அஜீரணபேதி முதலியவற்றிற்கு உளுந்து மாவுக்கூழும் களியும் நல்லது. நீர் எரிச்சலும் உஷ்ணத்தால் நீர் தாராளமாய் இறங்காமையும் உள்ள சமயங்களில் உளுந்தம் பருப்பை நீரில் ஊற வைத்துக் குடிநீராகக் கொடுக்கலாம். சிறு குழந்தைகளுக்கும். பெரியவர்களுக்கும் ஏற்படும் வயிற்றுக்
கடுப்பு. ஜலதோஷம், நித்திரையின்மை முதலிய சாதாரண நோய்களுக்கு கசகசாவை பாலில் அரைத்துக் கொடுத்தால் நல்லது.
பதினைந்து கிராம் வசம்புடன் ஐம்பது கிராம் வேப்பிலையைச் சேர்த்து கஷாயம் வைத்து வேளைக்கு 50 மி.லி மூன்று வேளை சாப்பிட இரண்டொரு தினங்களில் வயிற்றோட்டம் நிற்கும்.
அடிக்கடி பேதியாகிக் கொண்டிருந்தால் எலுமிச்சம்பழத்தை ககுளிர்ந்த நீரில் பிழிந்து உள்ளுக்கு சாப்பிட பேதி நிற்கும்.
வயிற்றுப் போக்கும் வாந்தியும்
புதினாக்கீரையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து வதக்கி அதில் நீர் விட்டு சற்று சுண்டக் காய்ச்சி கஷாயமாக இறக்கி வடிகட்டி குழந்தை களுக்கு அரை சங்களவு ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வர வயிற்றுப் போக்கும் வாந்தியும் போன இடம் தெரியாது.
வடக்கு பக்கம் போகும் எட்டி வேர்ப்பட்டை மட்டும் 15 கிராம் எடுத்து நசுக்கி மண் சட்டியில் போட்டு ஒரு குவளை நீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி மூன்று வேளை குடிக்க வாந்தி, பேதி, விஷபேதி, காலரா ஆகியவை உடனே நிற்கும்.