திருப்புகழ் கதைகள்: கழுவேற்றக் கதை!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 198
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


குறித்தமணி – பழநி
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?

சமணர்கள் கழுவேற்றப்பட்ட வரலாற்றை இரத்தம் தோய்ந்த தீவிரவாதத்தின் வரலாறு என்று மிகுந்தகோபத்தோடு எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் கூற்றுகளில் நிறைய தவறுகள் உள்ளன. சம்பவம் நடந்ததாகக் கூறப்படுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால். சமணத்தின் அடையாளங்கள், குறிப்புகள், கலாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன என்று கூறுவது முற்றிலும் தவறு. கீழ்க்கணக்கு நூல்களில் பல சமணர்களால் இயற்றப்பட்டவை. சிலப்பதிகாரத்தை எழுதியவரும் சமணர்தான். நன்னூலை எழுதியவர் ஒரு சமணர். திருத்தக்கத் தேவர் எழுதிய காப்பியம் இன்றும் இருக்கிறது.

இவர்களை விட்டுவிடுவோம். வரலாற்றை திரித்துக் கூறும் வரலாறு உடையவர்கள். திருவள்ளுவரையே கிறித்துவராக்க முயல்பவர்கள். சமணர்கள் கழுவேற்றத்தைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? அதைக்காணலாம். தென்னிந்திய வரலாற்றின் புகழ்பெற்ற ஆசிரியரான நீலகண்டசாஸ்திரி. அவர் சொல்கிறார் – இது ஒரு கசப்பான பழங்கதை; இதை வரலாறென்று எடுத்துக் கொள்ளமுடியாது. ஆனால் நீலகண்ட சாஸ்திரி ஒரு பிராமணர்; பழைமைவாதி என்று ஒதுக்கிவிடலாம். ஹிந்துமதத்தைப் பற்றி பல புத்தகங்களை எழுதிய (ஹிந்துத்துவ வாதிகளுக்குப் பிடிக்காத) வெண்டிடோனிகர் சொல்கிறார் – இந்தச் சம்பவம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இடதுசாரி வரலாற்றாசிரியராக அறியப்படும் ரோமிலா தபார் கூறுகிறார் – இது நடந்திருக்கக் கூடிய கதையாகத் தோன்றவில்லை.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
arunagiri muruga peruman
arunagiri muruga peruman

சமணமதத்தைப் பல வருடங்களாக ஆராய்ந்து கொண்டிருக்கும், சமண சமய வல்லுநர்கள், வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? பால்டுண்டாஸ் எழுதிய ‘ஜைனர்கள்’ என்ற புத்தகம் உலகப்புகழ் பெற்றது. இவர் கூறுவது இது – இந்தச் சம்பவத்தைப் பற்றி ஒருகுறிப்பு கூட ஜைன இலக்கியங்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ இல்லை. இவரைத் தவிர இந்தக் காலகட்டத்தைப் பற்றி ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியவர்கள் கார்ட், இந்திரா பீட்டர்சன், லெஸ்லி ஓர், ரிச்சர்ட் டேவிஸ் போன்றவர்கள். இவர்களில் யாரும் இந்தச் சம்பவத்திற்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறது என்று கூறவில்லை.

இந்தக் கதை எங்கிருந்து பிறந்தது? சிலப்பதிகாரம் காட்டும் தமிழகத்தில் மதம் சார்ந்த சண்டைகள் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக திருமாலைப் போற்றும் மிக அழகிய பாடல்கள் சிலப்பதிகாரத்தில் இருக்கின்றன. அதே போன்று மணிமேகலையும் பௌத்த மதத்தைச் சாராத திருவள்ளுவரைப் ‘பொய்யிற் புலவர்’ என்று வாழ்த்துகிறது. அப்பர், சம்பந்தர் காலக்கட்டமான ஏழாம் நூற்றாண்டில் இந்தப் பூசல் தொடங்குகிறது. அப்பர் சமணர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்;

பாசி பிடித்த பற்களை உடையவர்கள், அழுக்குப் பிடித்தவர்கள், பலம் இல்லாதவர்கள் என்று சமணர்கள் அழைக்கப்படுகிறார்கள். இன்னொரு பாட்டில் அப்பர் சொல்கிறார்:

கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி,

வடுக்களோடு இசைந்த நெஞ்சே கடுக்காய்ப் பொடியை உடலில் தடவிக்கொண்டு அதுதான் தவம் என்ற முட்டாள் தனமாக இருந்து மனதில் வடுக்களை ஏற்படுத்திக்கொண்டேன் என்கிறார் அவர். மேலும் சமணரை, இரவில் பட்டினிகிடப்பவர், சாப்பிடும்போது பேசாதவர், வெட்கம் இல்லாதவர், மயிற்பீலியைக் கையில் வைத்துக்கொண்டு அலைபவர், அம்மணமாக அலைபவர் என்று பலவாறாகக் கூறுகிறார்.

இவ்வாறே குளிக்காதவர், இரண்டு கைகளாலும் உணவருந்துபவர், நின்றுகொண்டே சாப்பிடுபவர், தலைமுடியைப் பிடுங்கிக் கொள்பவர் என்று சம்பந்தரும் சமணரைக் குறிப்பிடுகிறார். இந்திரா பீட்டர்சன் குறிப்பிடுவது போல இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதுவும் கொள்கைகளைப் பற்றி அல்ல. இருத்தல், மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றியது. தேவாரத்தில் பல பாட்டுகள் உடற் தூய்மையை வலியுறுத்துகின்றன. இறைவனைத் துதிக்கும்போது உடலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்கின்றன. சம்பந்தர் தனது மதுரைப்பாடல்களில் மற்றொன்றும் சொல்கிறார்:

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?

வேதத்தையும் வேள்வியையும் திட்டிக் கொண்டு திரியும் பயனற்றவர்களான சமணர்களையும் பௌத்தர்களையும் நான் வாதத்தில் வென்று அழிக்க விரும்புகிறேன். வேதத்தைத் திட்டினால் அது நாதனைத் திட்டியதாகும் என்று சம்பந்தர் கருதுகிறார். வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே என்று அவரே சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories