சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்சுகள்!

smart watch - 2026

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு புரட்சியாக பார்க்கப்படுவது ஸ்மார்ட் வாட்ச். பல முன்னணி மற்றும் பிரபலமான மொபைல் நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய் பயனாளர்களை கவரும் வகையில் பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்கள் சந்தையில் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.

ஸ்மார்ட் வாட்சினை பயன்படுத்த ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒன்று. ஒரே நிறுவனத்திலான ஸ்மார்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்சினை பயன்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த சூழலில் பிரபல சாம்சங் நிறுவனம் தான் அறிமுகப்பட்டுத்தியுள்ள இரண்டு வகை ஸ்மார்ட் வாட்சுகளை மொபைல் இல்லாமலும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் Samsung Galaxy Watch 4 மற்றும் Samsung Galaxy Watch 4 Classic என்னும் இரண்டு வகை ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியது.

samsung watch - 2026

இந்தியாவில் சற்று தாமதமாக அறிமுகமானாலும் , மேற்கண்ட ஸ்மாட் வாட்சுகள் Bluetooth-only மற்றும் LTE வசதி என்ற வசதிகளுடன் களமிறங்கியது. இதில் Bluetooth-only என்ற வசதியை பயன்படுத்துவதற்கு மொபைலின் ஸ்மார்ட் வாட்ச் செயலி தேவைப்படுகிறது.

LTE வசதி மூலம் ஸ்மார்ட் வாட்ச் தனித்து செயல்பட முடியும். சரி எப்படி மொபைல் இல்லாமல் ஸ்மார்ட் வாட்சினை பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

முதல் முறை இந்த வசதியின் மூலம் Samsung Galaxy Watch 4 மற்றும் Samsung Galaxy Watch 4 Classic வாட்சினை இயக்க விரும்பினால் , turn on செய்ய வேண்டும் அல்லது முன்பே வாட்சினை பயன்படுத்துபவராக இருந்தால் reset செய்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு தோன்றும் கேள்விக்குறி (?) ஐகானை கிளிக் செய்து , பிறகு ‘tap here’ என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு அறிவிப்பு ஒன்று தோன்றும். அதனை கவனமாக படித்து பார்த்துவிட்டு ‘Continue’ என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தோன்றும் அதனை படித்து பாருங்கள்..அதனை ஏற்றுக்கொண்டால் கீழே தோன்றும் ‘Next’ என்னும் வசதியை கிளிக் செய்து முன்னேறுங்கள்.

இப்போது உங்களிடம் சாம்சங் கணக்கிற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் இருந்தால் அதனை பயன்படுத்துங்கள் , இல்லை என்றால் Skip என்னும் வசதியை தேர்வு செய்துக்கொள்ளலாம்.

watch - 2026

அதன் பிறகு நீங்கள் இருக்கும் நாட்டின் நேரம் குறித்த விவரங்களை கொடுக்கப்பட்ட வசதியில் set செய்துக்கொள்ளுங்கள்

இப்போது உங்கள் ஸ்மார்ட் வாட்ச் தரவுகளை திரும்ப பெறுவதற்கான PIN ஒன்றை உருவாக்க கேட்கும். உங்கள் விருப்பப்படி அதையும் உருவாக்குங்கள்.

இப்போது உங்கள் வாட்ச் மொபைல் இல்லாமல் செயல்பட தயாராகிவிடும் . பின்னர் நீங்கள் மொபைலுடன் இணைக்க விரும்பினால் Settings > Connect to phone > ✔ என்னும் வசதிக்கு செல்லுங்கள். பின்னர் ஏற்கனவே பதிவு செய்த நான்கு இலக்க PIN நம்பரை பதிவு செய்து மொபைலுடன் பயன்படுத்த தொடங்கலாம்.

மொபைல் இல்லாமல் Samsung Galaxy Watch 4 மற்றும் Samsung Galaxy Watch 4 Classic வாட்சினை உடற்பயிற்சி செய்தல், மலையேறுதல் போன்ற வெளிப்புற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.

ஆனால் மொபைலுடன் இணைத்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் சில வசதிகள் இம்முறை பயன்படுத்தலின் பொழுது கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories