spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: ரகுவம்சம்!

திருப்புகழ் கதைகள்: ரகுவம்சம்!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் – 213
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

சிவனார் மனம் குளிர – பழநிரகுவம்சம் 2

            வேறு சில புராணங்கள் இராமபிரான் பிறந்த சூரிய வம்சம் பற்றிக் கூறுகின்றன. சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய ரகுவம்சம் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

            சூரியன், வைவஸ்தமனு, இஷ்வாகு (இவரது பெயரால் இந்த வம்சம் ‘இஷ்வாகு வம்சம்’ எனவும் அழைக்கப்படுகிறது), விகுட்சன், புரஞ்சயன், அனநேசு, பிருது, சாவஷ்தி, குவலயாசுவன், யுவனாசுவன்

மாந்தாதா (மாந்தாதா பற்றிய போஜராஜன் வாழ்க்கையில் ஒரு குறிப்பு இருக்கிறது), அம்பரீஷன், புருகுச்சன், திரிசங்கு – புருகுச்சன் பேரன் (விஸ்வாமித்திரர் உருவாக்கிய ‘திரிசங்கு சொர்க்கம்’ இவனுக்காகத்தான்), அரிச்சந்திரன் – திரிசங்குவின் மகன் (பொய் பேசாத மன்னன். விஸ்வாமித்திரர்-வசிஷ்டர் இருவரின் சண்டையில் மாட்டிகொண்டு துன்பப்பட்டவன்), ரோஹிதன், பாகுகன் -ரோஹிதன் பரம்பரை.

raghuvamsam vert

            இவர்களுக்குப் பின்னர் சகரன் (இவனது 60000 மகன்கள் பாதாள லோகத்தில் கபில முனிவரால் எய்க்கப்பட்டு பஸ்மமாக ஆனார்கள்), அசமஞ்சன், அம்சுமான், பகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூமிக்குக் கொண்டுவந்தவர்), அஸ்தமகன், மூலகன், கட்வாங்கன், தீர்கபாகு, ரகு – தசரதனின் தாத்தா, அஜன் -தசரதனின் தந்தை, தசரதன், தசரதருக்குப் பின்னர் இரமபிரான்.

            ராமருக்கு பின் – ராமரின் மகன்களான லவன், குசன் இருவரில் குசனுக்கு தான் ஆண் வாரிசு பிறந்தது.

1] குசனின் மகன் அதிதி

2] அதிதியின் மகன் நிஷாதா

3] நிஷாதாவின் மகன் நளன்

4] நளனின் மகன் நாபன்

5] நாபனின் மகன் புண்டரீகன்

6] புண்டரீகனின் மகன் ஷேமதன்வன்

7] ஷேமதன்வனின் மகன் தேவனிகன்

8] தேவனிகனின் மகன் அஹினகு

9] அஹினகுவின் மகன் சலா

10] சலாவின் மகன் உக்த்யா

11] உக்த்யாவின் மகன் வஜ்ரநாபா.

12] சங்கநாபா

13] அப்யுதிட்டஸ்வா

14] விஸ்வசஹா

15] ஹிரண்ய நாபா

16] புஷ்யா

17] திருவசந்தி

18] மரு

19] பிரசுஸ்ருதா

20] சுஷந்தி

21] அமிர்ஷா

22] மஹஸ்வாத்

23] விஸ்ருதவத்

24] பிரிஹத் பலா

            இன்று பலருக்கு முப்பாட்டனார் பெயரே தெரிவதில்லை. அவ்வாறே தெரிந்தாலும் முப்பாட்டனாரின் அப்பா, முப்பாட்டனாரின் பாட்டனார் பெயர் எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அவ்வாறு இருக்க இந்த அளவு சூர்ய வம்சத்தின் பெயர் பட்டியல் நமக்கு கிடைத்ததே பெரிய விஷயம். விஷ்ணு புராணம், மகாபாரதம், பாகவதம் அனைத்திலுமே இராமரின் வழித்தோன்றலான பிருஹத்பலா குருக்ஷேத்ர யுத்தத்தில் கௌரவர்கள் அணியில் போரிட்டு. அபிமன்யுவால் கொல்லப்பட்டான் என்னும் செய்தி சொல்லப்பட்டு உள்ளது.

            மாந்தாதா பற்றி போஜராஜன் வாழ்க்கையில் ஒரு குறிப்பு இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் பல்லாள தேவர் எழுதிய போஜ ப்ரபந்தம் போஜனின் வாழ்க்கை வரலாற்றை நன்கு சித்தரிக்கிறது. இதன் படி சிந்துலர், முஞ்சர் ஆகிய இருவர் அண்ணன் தம்பிகள். சிந்துலரின் மகனாக போஜன் பிறந்தார். தன் தம்பிக்கு மகுடம் சூட்டி உரிய வயது வரும் போது போஜனுக்கு முடி சூட்டி அரியணையில் ஏற்றுமாறு கூறி சிந்துலர் முடி துறந்தார். ஒரு நாள் அரண்மனைக்கு வந்த ஜோதிடர் போஜனின் ஜாதகத்தைப் பார்த்து, அதாவது இந்த போஜன் 55 வருடம் 7 மாதம் 8 நாள் கௌடதேசம் உள்ளிட்ட தென்னாட்டை பெரும் புகழுடன் ஆளப் போகிறான் என்று கூறினார்.

            இதனால் கலக்கம் அடைந்த முஞ்ச ராஜன் போஜனைக் கொல்லுமாறு தன் பணியாளர்களிடம் உத்தரவிட்டான். குருகுலத்திலிருந்த போஜன் கொலை செய்வதற்காக அழைத்து வரப்படும் போது தன்னை முஞ்ச ராஜன் கொலை செய்ய ஆணை பிறப்பித்திருப்பதை அறிந்து ஒரு ஓலை நறுக்கைக் கொடுத்து அதை முஞ்ச ராஜனிடம் கொடுத்துத் தனது கடைசி ஆசையை நிறைவேற்றுமாறு வேண்ட கொலை செய்ய வந்தவர்கள் அந்த ஓலையை முஞ்ச ராஜனிடம் சென்று தந்தனர்.

            அந்த ஓலை நறுக்கில் ஒரு சுலோகம் இருந்தது.அதில் மகா புத்திசாலியான போஜன், “சத்யயுகத்தில் இருந்த உலகின் ஜ்வலிக்கும் மணி என்று கருத்தப்பட்ட சக்கரவர்த்தி மாந்தாதா இறந்து போனான். கடல் மீது பாலம் கட்டி ராவணனைக் கொன்ற இராமரும் இப்போது இல்லை. யுதிஷ்டிரர் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் இந்த பூவுலகை ஆண்டுள்ளனர். ஆனால் இந்த பூமி அவர்கள் இல்லாமல் கூட இன்னும் இருக்கிறது. ஓ முஞ்ச ராஜனே, இந்த பூமி நீ நிலையாக இருக்க, தான் போக விரும்புகிறது போலும்” என்று  எழுதி இருந்தான். இதைப் பார்த்தவுடன் முஞ்ச ராஜனுக்கு ஞானம் வந்து அவன் அரசைத் துறந்து போஜனையே அரசனாக்கினான். இளைஞனாக இருந்த போதே இப்படி அபாரமான கவித் திறமையையும் கூர்மையான புத்தியையும் கொண்டிருந்த போஜன் எப்படி நாட்டை ஆண்டிருப்பான் என்பதை நாம் யூகித்து உணர்ந்து கொள்ளலாம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe