Galaxy S22 - 2026

கேலக்ஸி எஸ்22 பிளாக்‌ஷிப் சீரிஸ்: விஷயம் இதுதான்!

லைஃப் ஸ்டைல் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் வணிகம்
Galaxy S22 - 2026

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

புதிய எஸ்22 சீரிஸ் பற்றி சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது, புதிய சாம்சங் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு பிப்ரவரி 9 ஆம் தேதியும், விற்பனை பிப்ரவரி 24 தேதி துவங்கும் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு சாம்சங் – கேலக்ஸி எஸ்22, எஸ்22 பிளஸ் மற்றும் எஸ்22 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.

மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் / எக்சைனோஸ் 2200 பிராசஸர் வழங்கப்படவுள்ளது.

கேலக்ஸி எஸ்22 மாடலில் 6.06 இன்ச் டிஸ்ப்ளே, எஸ்22 பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களில் முறையே 6.55 இன்ச் மற்றும் 6.81 இன்ச் டிஸ்ப்ளே, எஸ்22 அல்ட்ரா மாடலில் எஸ் பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.