twitter - 2026

டிவிட்டர் ஸ்பேஸ்: இந்த வழிமுறைகள் தெரியுமா..?

லைஃப் ஸ்டைல் அடடே... அப்படியா? தொழில்நுட்பம்
twitter - 2026

அமெரிக்காவில் பிரபலமான கிளப் ஹவுஸ் செயலியின் ஆடியோ சாட் பிரபலமானவுடன் டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆடியோ சாட்டிங் அம்சத்தை உருவாக்கின.

அதனடிப்படையில் டிவிட்டரில் இருக்கும் டிவிட்டர் ஸ்பேஸ் அம்சம், ஒத்தக் கருத்துடைய பலரும் இணைந்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் இடமாக இருக்கிறது.

மிக குறுகிய காலத்திலேயே பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் டிவிட்டர் ஸ்பேஸில் உரையாடலை பதிவு செய்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

சில முக்கியமான தகவல்களை தவறவிட்டிருந்தால் மீண்டும் அதனை பிளே பேக் செய்து கேட்டுக்கொள்ளக்கூடிய அம்சமும் உண்டு. ஹோஸ்ட் மட்டுமே டிவிட்டர் ஸ்பேஸ்களை பதிவு செய்யக்கூடிய அம்சம் இருந்த நிலையில், டிவிட்டர் யூசர்களும் ஸ்பேஸ் உரையாடல்களை பதிவு செய்துகொள்ளலாம்

டிவிட்டர் ஸ்பேஸ் ரெக்கார்டு செய்வது எப்படி?

டிவிட்டர் ஸ்பேஸ் தொடங்கும்போது ரெக்கார்டு ஆப்சனை யூசர்கள் மாற்ற வேண்டும். அப்போது ஸ்பேஸ் ஸ்கிரீனின் மேல்புறத்தில் ரெக்கார்டிங் என்ற ஆப்சன் காண்பிக்கும்

பேசுபவர்கள் (Speakers) மட்டுமே ஸ்பேஸ் ரெக்கார்டிங்கில் பதிவு செய்ய அனுமதி கிடைக்கும்.

ஸ்பேஸ் (Space) முடிந்ததும், ஸ்பேஸ் பதிவை ட்வீட் மூலம் பகிர்வதற்கான இணைப்பை ஹோஸ்ட் (Host) கொடுப்பார்.

6G-ஐ கொண்டு வருகிறது ஜியோ..! 5G-ஐ விட 100 மடங்கு இன்டர்நெட் வேகம்

பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு, தொடக்க நேரத்தைத் திருத்தம் செய்வதற்கான ஆப்சன் ஹோஸ்டுக்கு இருக்கும். அந்த ஆப்சன் மூலம் ஸ்பேஸ் தொடங்குவதற்கு முன் இருக்கும் சில நிமிடங்களை நீக்கிக் கொள்ளலாம்

இப்போது யூசர்கள் ஸ்பேஸ் ரெக்கார்டை கேட்க வேண்டும் என்றால் உங்கள் டைம் லைனில் இருக்கும் ஸ்பேஸ் கார்டில் வைத்து ‘Play Recording’ என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

டிவிட்டரில் இருக்கும் ஸ்பேஸ் உரையாடல்களை எப்போது வேண்டுமானாலும் ஹோஸ்டால் டெலிட் செய்ய முடியும்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து ஸ்பேஸ் உரையாடல்களும் 30 முதல் 120 நாட்கள் வரை டிவிட்டர் ஸ்பேஸில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.