health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: இரத்த பேதி, உதிரப்போக்கு, எச்சிற்புண், கட்டிகள் உடைய..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

இரத்த பேதிக்கு…

நொச்சிப் பூவை உலர்த்தி இடித்து இந்தப் பொடியுடன் பன்னீர். கற்கண்டு சேர்த்து பருக இரத்த பேதி நிற்கும்.

அதிக உதிரப் போக்கா?

  • பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் அதிகமாக உதிரப் போக்குக் கண்டால் கடுக்காயை இடித்துத் தூள் செய்து பனை வெல்லம் சேர்த்து கோலிக்குண்டு அளவு சாப்பிட்டால் இரத்தப் போக்கு குறையும்

குழந்தை எதையோ விழுங்கி விட்டதா?

வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கையாவது முட்டை கோசையாவது சாப்பிடக் கொடுக்க விழுங்கிய பொருள் மலத்தோடு வந்து விடும்.

கட்டிகள் பழுத்து உடைய…

வெங்காயத்தைச் சுட்டு அத்துடன் மஞ்சளையும் சிறிது நெய்யையும் விட்டுப் பிசைந்து கட்டிகளின் மீது வைத்துக் கட்டுப்போட கட்டிகள் எளிதில் பழுத்து உடைந்துவிடும்.

எச்சிற் புண்ணுக்கு…

சிலருக்கு வாயின் ஓரத்தில் எச்சிற்புண் ஏற்படும். துளசி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர எச்சிற் புண் மறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.