லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முருங்கை பூ சாதம்!

Published:

Drumstick flower rice - 2026

முருங்கை பூ சாதம்
தேவையான பொருட்கள் :

முருங்கை பூ – 2 கப்,
சின்ன வெங்காயம் 50 கிராம்,
கடுகு – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
வடித்த சாதம் – 2 கப்,
மஞ்சள் தூள் – சிறதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

முருங்ககை பூவை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்த பின் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதக்கிய பின் மிளகு தூள், மஞ்சள் தூள், முருங்கை பூ, உப்பு போட்டு கிளறவும்.
கடைசியில் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும். இந்த முருங்கை பூ வதக்கலை வடித்த சாதத்துடன் கலந்து கிளரவும்.
முருங்கை பூ சாதம் ரெடி.

முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதத்தை எதிர்க்கும் திறன் உடலுக்கு கிடைக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img