லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சிறுகீரை சாதம்!

sirukirai sadam - 2026

சிறு கீரை சாதம்
தேவையான பொருட்கள்:
ஆய்ந்த சிறு கீரை – மூன்று கைப்பிடி அளவிற்கு,
பூண்டு – 4 பல்,
நறுக்கிய தேங்காய் துண்டுகள் – கால் கப், பச்சை மிளகாய் – 3,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவிற்கு, சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு,
கடுகு – கால் டீஸ்பூன்,
உளுந்து – கால் டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – கால் டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்,
வர மிளகாய் – 2
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
வடித்த சாதம் – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவிற்கு.

செய்முறை
முதலில் சிறுகீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு அலசி வைக்கவும். பின்னர் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும் .

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் பூண்டு பற்கள் தோல் உரித்து சேர்க்கவும் . பின்னர் அதனுடன் நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் வதங்கியதும், பச்சை மிளகாய்களை கீறி சேர்க்கவும். புளிப்பு தன்மைக்கு புளி கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் நன்கு வறுபட்டதும் அலசி வைத்த கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கீரை வதங்கி சுருங்கியதும் அதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மீண்டும் ஒரு வாணலியை வைத்து அடுப்பைப் பற்ற வைத்து கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.

பருப்பு வகைகள் பொன்னிறமாக வதங்கியதும் சீரகம், வர மிளகாயை கிள்ளி சேர்த்து அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பச்சை வாசம் போனதும் அரைத்து வைத்துள்ள கீரை கலவையை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

இவைகள் வதங்கி வந்ததும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை கலந்து நன்கு பிரட்டி எல்லா இடங்களிலும் ஒன்று போல கலந்ததும் அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories