health tips - 2026

அப்பாச்சி தீர்வு: ஜீரணசக்தி, வாய்வுப்பிடிப்பு, வயிற்றுப்புழு, முகப்பரு, மாதவிலக்கு..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

ஜீரண சக்திக்கு…

உப்பையும் வெள்ளரிக்காயையும் சேர்த்து சாப்பிட ஜீரண சக்தி பெருகும். உடல் பொலிவடையும் பித்தமும், மார்புச் சளியும் நீங்கும்.

வாய்வுப் பிடிப்பா?

உணவில் இஞ்சி, பூண்டு, பெருங்காயம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பல் பூண்டு எடுத்து தோலுரித்து வாயில் போட்டு மென்று விழுங்கி இரண்டு டம்ளர் நீர் குடிக்க வாய்வுப் பிடிப்பு உடனே நீங்கும்.

வயிற்றில் புழுக்களா?

பச்சை மஞ்சள் கிழங்குச் சாற்றை அரை ஸ்பூன் பாலில் கலந்து இரண்டு மூன்று நாள்கள் சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள புழுக்கள் மடிந்து வெளியேறும்.

முகப்பருவுக்கு…

துத்தி இலையையும் பூவையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து பருக்களின் மீது போட்டு வந்தால் வீக்கமும் வடிந்து பருக்களும் ஆறிவிடும்.

மாதவிலக்கு சரியாக…

பிரண்டை உப்பை வாங்கி வந்து நெய் அல்லது வெண்ணெயில் கலந்து தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இரண்டே நாள்களில் மாதவிலக்கு சரியாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.