
இராஜபாளையம் சாஸ்தா கோவில் நீர் தேக்கத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விவசாயிகள் நலன் கருதி சரியான நேரத்தில் திறக்கவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவதாக போவதாக விவசாயிகள் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள உள்ள சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் 43 அடி கொள்ளளவு கொண்டது
இந்த நீர் தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரைப் பயன்படுத்தி 8 கண்மாயிகளுக்கு பாத்தியபட்ட 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றனர்
இந்த பகுதியில் தற்போது நெல் பயிரிடப்பட்டு உள்ளதால் இந்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால் விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கு ஆகையால் தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜான்சிஅனிதா விடம் மனு அளித்தனர்
விவசாய சங்க மாவட்ட தலைவர் கூறும்பொழுது இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ளோம் விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் தற்போது தண்ணீர் திறந்துவிட்டால் நெல் பயிர்களை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நெற்பயிர்கள் சேதமடையும் ஆகையால் தண்ணீரை உடனே திறப்பதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளோம்
இதை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் இப்பகுதி விவசாயிகளை திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெரும் என்று தெரிவித்தனர்.